தமிழக மக்கள் ஏன் அணு உலையை எதிர்த்து போராடுகிறோம் தெரியுமா? திருமாவளவன்
தூத்துக்குடி: அணு உலையை கேரளாவில் அமைக்க முயன்றபோது அங்குள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடி விரட்டியடித்தன. ஆனால் தமிழகத்தில் ஒற்றுமை உணர்வு இல்லாததால் இன்று நாம் அணு உலைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம். கேரள மக்கள் போல தமிழக மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையைக் கண்டித்து தூத்துக்குடி பனியமாதா ஆலயம் முன்பு நேற்று 6வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது,
ஈழம் என்ற சொல் உலகத்தை திரும்பி பார்க்க வைத்ததுபோல் இடிந்தகரையும் உலக மக்களை உற்றுப் பார்க்க வைத்துள்ளது. அணு உலையை கேரளாவில் அமைக்க முயன்றபோது அங்குள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடி விரட்டியடித்தன. ஆனால் தமிழகத்தில் ஒற்றுமை உணர்வு இல்லாததால் இன்று நாம் அணு உலைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம். கேரள மக்கள் போல தமிழக மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. பல நாடுகளில் இருந்து கழற்றி எடுக்கப்பட்டு வந்த பொருட்கள் மூலம் கூடங்குளம் அணு உலை அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. மேலும் அணு உலை அமைந்துள்ள இடத்துக்கு கீழே எரிமலை குழம்பு ஓடிக் கொண்டிருப்பதாக ராஜேந்திர சர்ச்சார் தெரிவித்துள்ளார்.
இயற்கையிலேயே அது பாதுகாப்பாக இல்லை. சுண்ணாம்பு பாறையின் மேல் அமைந்துள்ளது. அணு உலையில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, கழிவு மூலம் தயாரிக்கப்படும் அணு குண்டுகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா ஏகாதிபத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தான் பிரதமர் மன்மோகன் சிங் சில்லரை வாணிபத்தில் அன்னிய நாடுகள் முதலீட்டுக்கு அனுமதி அளித்துள்ளார். இது அணு உலைக்கு எதிரான போராட்டம் மட்டும் அல்ல. ஏகாதிபத்ய நாடுகளுக்கு எதிரான போராட்டமும் ஆகும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications