ஆண்களுக்காகவே ஒரு பிரத்யேக 'செக்ஸ்' இணையதளம்... பிரிட்டன் பாட்டி தொடங்கினார்!
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த 52 வயதான பெண் வர்த்தகர் ஒருவர் ஆண்களுக்கான பிரத்யேக ஆபாச இணையதளத்தைத் தொடங்கியுள்ளார். அந்த இணையதளத்தில் படுக்கை அறை ரகசியங்கள் உள்ளிட்டவற்றைப் பற்றி புட்டுப் புட்டு விளக்குகிறாராம் இவர்.
இவரது பெயர் சின்டி கேலப். இவர் தொடங்கியுள்ள MakeLoveNotPorn.tv என்ற இணையதளம் ஆண்களுக்கான பிரத்யேக செக்ஸ் இணையதளமாம். அதில் ஆண்கள் காமக்கலைகளை முறையாக கற்றுத் தேறவும், தங்களது சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவும், அனுபவங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் வசதி செய்து கொடுத்துள்ளாராம் கேலப்.
மேலும் அரைகுறையாக செக்ஸ் குறித்து தெரிந்திருப்போரை தெளிவுபடுத்தும் கற்பித்தல் தளமாகவும் இது அமையுமாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இன்றைய இளைஞர்கள் எல்லோருமே ஹார்ட்கோர் செக்ஸில்தான் அதிக நாட்டம் செலுத்துகின்றனர். அதைப் பார்த்துதான் செக்ஸ் குறித்த அறிவைப் பெறுகிறார்கள். ஆனால் இது தவறு. எனவேதான் இந்த தளத்தைத் தொடங்கினேன். இது ஒரு அருமையான செக்ஸ் கல்வித் தளமாக திகழும். பெற்றோர்களுக்கும், செக்ஸ் கல்வியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் இது நல்ல வழிகாட்டியாக அமையும்.
ஆரோக்கியமான செக்ஸ் உறவுகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வை இந்தத் தளம் மூலம் பெற முடியும் என்றார்.
கேலப் ஒரு சிங்கிள் வுமன் ஆவார். தன்னை விட பல மடங்கு வயது குறைந்தர்களுடன் உறவு கொள்வதில் பெருமை கொள்பவர். செக்ஸ் விஷயத்தில் அடாத ஆசையும், விடாத குறிக்கோளும் வைத்திருப்பவர். தனது அனுபவங்களைக் கொண்டே இந்தத் தளத்தை அமைத்ததாக அவர் கூறுகிறார்.
கவர்ச்சிகரமாக உடை அணிந்து பார்ட்டிகளுக்குத் தவறாமல் போய் வரும் இந்தப் பெண்மணி, இளம் காதலர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும், திருத்தங்களையும் கொடுக்க தான் எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறுகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் நான் இளைஞர்களுடன் டேட்டிங் போவதில் பெருமைப்படுகிறேன். குறிப்பாக 20களில் இருக்கும் இளைஞர்கள் என்றால் எனக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும். அதற்காக நான் வெட்கப்படவில்லை. அவர்களுக்கு நல்ல செக்ஸ் எது என்பதை சொல்லித் தரவும் நான் தயங்குவதில்லை.
இளைஞர்களுடன் நீங்கள் செக்ஸில் ஈடுபடும்போது, அவர்களுக்கு நிறைய சொல்லித் தர முடியும். நாமும் கற்றுக் கொள்ள முடியும். அவர்களுக்கு சரியான செக்ஸ் எது என்பதையும் சுட்டிக் காட்ட முடியும். மேலும் நமக்கும் வயது குறைவது போல உணர்வு ஏற்படும் என்கிறார் சிரித்தபடி.
கேலப்பின் தந்தை ஆங்கிலேயர், அதேசமயம் தாயார் ஒரு சீனர் ஆவார். ஆக்ஸ்போர்டில் படித்தவர். 1998ம் ஆண்டு நியூயார்க்குக்கு இடம் பெயர்ந்தார். தற்போது அங்கேயே வசித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications