திரிணாமுல் அமைச்சர்கள் நாளை ராஜினாமா: முகுல் ராய் தகவல்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக முகுல்ராய் கூறியதாவது:
எங்கள் கட்சியின் அனைத்து மத்திய அமைச்சர்களும் நாளை பிற்பகல் 3 மணிக்கு பிரதமரை டெல்லியில் சந்தித்து, எங்கள் ராஜினாமா கடிதங்களை அளிக்கிறோம். டீசல் விலை உயர்வு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எங்கள் கட்சியின் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்வர். மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்துவிட்டார். அவரது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றார் அவர்.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் அனைத்து கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே அமல்படுத்தப்படும் என முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மக்களவையில் உறுதி அளித்ததை மத்டிய அரசு மீறிவிட்டது என்றும் முகுல் ராய் சாடினார்.












Click it and Unblock the Notifications