ராஜபக்சே வருகை கண்டித்து மத்திய அரசில் இருந்து திமுக விலக வேண்டும்: பாஜக
சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து மத்திய அரசிற்கான ஆதரவை திமுக விலக்கி கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் திமுகவும் அங்கம் வகிக்கிறது.
திமுகவை போல மத்திய அரசில் அங்கம் வகித்து வந்த மற்றொரு கட்சியான திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு மீதான கட்டுப்பாட்டை கண்டித்து மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கி கொண்டுள்ளார்.
மத்திய அரசின் அழைப்பை ஏற்றுதான் ராஜபக்சே இந்தியாவிற்கு வருகிறார். ராஜபக்சேவின் வருகையை தடுத்து நிறுத்த முடியாததால், மத்திய அரசில் இருந்து திமுக விலக வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications