24 மணிநேர லாரி ஸ்டிரைக்: தமிழகத்தில் ரூ.120 கோடி வருவாய் இழப்பு

டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 24 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள 65 லட்சம் சரக்கு லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் என்றும், அதில் தமிழகத்தில் மட்டும் 5.25 லட்சம் லாரிகள் பங்கேறகும் என்று கூறப்பட்டது.
அறிவித்தபடி நேற்று நள்ளிரவு முதல் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதையொட்டி சரக்கு முன்பதிவு நேற்று முன்தினம் காலை முதலே நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த வேலைநிறுத்தத்தால் தமிழக லாரி உரிமையாளர்களுக்கு ரூ.120 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் வ.உ.சி. மார்க்கெட் மற்றும் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் எந்நேரமும் லாரிகளில் இருந்து பொருட்கள் இறக்குவதும், ஏற்றுவதுமாக இருப்பதைக் காணலாம். ஆனால் நேற்று வேலைநிறுத்தத்தால் அப்பகுதிகளில் லாரிகளையே காணமுடியவில்லை.












Click it and Unblock the Notifications