தாக்குதல் எதிரொலி: சென்னை அமெரிக்க தூதரகத்தில் 24ம் தேதி வரை விசா வழங்கல் இல்லை
சென்னை: நபி நாயகத்தை அவமதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட சினிமாவை கண்டித்து சென்னையி்ல் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் கடந்த ஒரு வாரமாக விசா வழங்கும் பணியை அமெரிக்க தூதரகம் நிறுத்தி வைத்துள்ளது. தற்போது சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளதால் வரும் 24ம் தேதி முதல் மீண்டும் விசா வழங்கும் பணிகள் துவங்க உள்ளது.
சென்னை அண்ணா சாலையில் அமெரிக்க தூதரகம் உள்ளது. இங்கு அமெரிக்காவிற்கு வேலை மற்றும் சுற்றுலா செல்பவர்கள், வர்த்தக பணிகளுக்காக செல்பவர்கள் விசா பெற விண்ணப்பம் செய்கின்றனர். இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, முறையான விசா வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட சினிமா ஒன்றில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றதாக கூறி, முஸ்லிம் அமைப்புகள் கடந்த வாரம் முற்றுகை போராட்டம் நடத்தி, அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் தூதரக அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு காமிரா மற்றும் கண்ணாடிகள் சேதமடைந்தன.
பாதுகாப்பு கருதி அமெரிக்க தூதரக அதிகாரிகள் விசா வழங்கும் பணியை நிறுத்தி வைத்தனர். இதனால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசா விண்ணப்பங்களை பெறும், சென்னை தூதரகத்தின் பணிகள் முடங்கியது. மேலும் குறிக்கப்பட்ட காலத்தில் விசா கிடைக்காமல் விண்ணப்பித்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந் நிலையில் அமெரிக்க தூதரகம் முன் தற்போது அமைதி நிலவி வருகிறது. மேலும் தூதரகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே வரும் 24ம் தேதி முதல் மீண்டும் வழக்கம் போல விசா வழங்கும் பணி துவங்கும் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications