10 வயது குறைந்த கால்பந்து வீரருடன் சுற்றிய பாப் பாடகி ஷகீரா கர்ப்பம்!

ஸ்பெயின் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் ஜெரார்டு பிக் (25). தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டவர். கடந்த 2010ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடர் மற்றும் இந்த ஆண்டு யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஆகியவற்றில் ஸ்பெயின் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தவர்.
தற்போது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடி வருகிறார். ஜெரார்டு பிக்கின் ஆட்டத்தில் கவரப்பட்ட கொலம்பியா நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஷகீரா, அவருடன் சுற்றி திரிந்தார். கடந்த 2010ம் ஆண்டு முதல் சந்தித்து, பழகி வந்த இருவருக்கும் இடையே உடல் ரீதியான உறவு இருப்பதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஷகீரா தெரிவித்திருந்தார்.
இருவரும் சேர்ந்து பல இடங்களில் சுற்றினர். இந்த நிலையில் தற்போது ஷகீரா கர்ப்பமாக இருப்பதாக, அவரே தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
பலருக்கும் தெரிந்தது போல நானும், ஜெரார்டும் எங்களின் முதல் குழந்தையின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இந்த இனிமையான நேரத்தில் எங்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக மற்ற பணிகளை சில நாட்களுக்கு தள்ளி வைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
ஷகீராவிற்கு குழந்தை பிறக்கும் தேதி குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை. ஷகீராவின் அறிவிப்பை தொடர்ந்து இந்த வாரம் இறுதியில் அவர் லாஸ் வேகாஸில் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகி உள்ளார். எதிர்காலத்தில் ஷகீரா ஒரு தாயாகவும், ஒரு பாடகியாகவும் தனது வாழ்க்கையை தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2006ம் ஆண்டு பாப் இசை உலகிற்குள் நுழைந்த ஷகீரா, உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார். ஷகீராவுக்கு தற்போது 35 வயதாகிறது. ஆனால் பிக்கிற்கு 25 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications