பாக். டிவிகளில் விளம்பரம் கொடுத்து முஸ்லீம்களை சமாதானப்படுத்தும் ஒபாமா

கலிபோர்னியாவைச் சேர்ந்த இஸ்ரேலிய அமெரிக்கர் ஒருவர் எடுத்த இஸ்லாமியர்கள் குறித்த படமானது உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களை பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியுள்ளது. நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் இந்தப் படம் இருப்பதாக இஸ்லாமியர்கள் குமுறி வருகின்றனர். பல்வேறு நாடுகளிலும் அமெரிக்க அரசையும், அதன் தூதரகங்களையும் குறி வைத்து தாக்குதல்கள், போராட்டங்கள் நடந்து வருகின்றன.
பாகிஸ்தானிலும் கொந்தளிப்பான நிலையே காணப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் மூலம் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சமாதானப் பேச்சை விளம்பரமாக ஒளிபரப்பு செய்யும் பணிகளில் அமெரிக்க அரசு இறங்கியுள்ளது. இதற்காக அது பாகிஸ்தான் டிவி நிறுவனங்களுக்கு விளம்பரங்களைக் கொடுத்து வருகிறது. அதில், ஒபாமாவும், ஹில்லாரி கிளிண்டனும் பேசும் பேச்சுக்கள் இடம் பெற்றுள்ளன. இதற்காக இதுவரை 70 ஆயிரம் டாலர் வரை செலவிட்டுள்ளதாம் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம்.
இந்த விளம்பரத்தில், இஸ்லாம் மீது அமெரிக்கா வைத்துள்ள மரியாதை, சம்பந்தப்பட்ட படத்துக்கும், அமெரிக்க அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை விளக்கிப் பேசியுள்ளார் ஒபாமா.
இந்த விளம்பரங்கள் மூலம் இஸ்லாமியர்கள் மனதில் அமெரிக்காவுக்கு எதிரான துவேஷத்தைக் களைய முடியும் என நம்புவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலன்ட் கருத்து தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications