செவ்வாய் கிரகத்தில் பிரமிடு வடிவ பாறை... கண்டுபிடித்தது கியூரியாசிட்டி!

கிளன்லெக் என்ற இடத்தை நோக்கிப் போகும் பாதையில் இந்த பிரமிடு வடிவ பாறை உள்ளது.
இந்தப் பாறையானது கியூரியாசிட்டி விண்கலத்திற்கு முன்பாக 2.5 மீட்டர் தூரத்தில் உள்ளது. இதன் உயரம் 25 சென்டிமீட்டராக உள்ளது. 40 சென்டி மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது. இதை கியூரியாசிட்டியில் உள்ள ரோபோட் ஆய்வு செய்யவுள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறைக்கு ஜேக் மெடிஜெவிக் என்று பெயரிட்டுள்ளது நாசா. ஜேக் மெடிஜெவிக் என்பவர், நாசாவின் செவ்வாய் அறிவியல் ஆய்வகத்தில் பணியாற்றிய முதன்மைப் பொறியாளர் ஆவார். கியூரியாசிட்டி விண்கலத்தின் முக்கியப் பணிகளில் இவரது பங்கும் உண்டு. 64 வயதான இந்தப் பொறியாளர், கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாய் கிரகத்தில் கால் பதித்த அடுத்த நாள் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்து.
இந்த பிரமிடு வடிவ பாறையானது அதிசயமானதல்ல என்று கூறியுள்ள நாசா, இது காற்றின் அரிப்பால் இந்த வடிவத்தை அடைந்திருக்கலாம் என்று கருதுவதாக கூறியுள்ளது.
கியூரியாசிட்டி விண்கலம் இறங்கிய கேல் கிரேட்டர் பகுதியில் உள்ள மலையிலிருந்து இந்தப் பாறையானது தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. நீண்ட காலம் இந்தப் பாறையானது இதே இடத்தில் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. மேலும் இது கடினமான பாறையாக இருப்பதாகவும் கருதப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications