வெறுப்பு, பகையைமை சகித்துக் கொள்ள வேண்டுமாம்: சாஞ்சியில் ராஜபக்சே பேச்சு

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், ராய்சென் மாவட்டம் சாஞ்சியில் சுமார் ரூ.200 கோடி செலவில் அமைய உள்ள இந்த பல்கலைக் கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
ஏராளமான எதிர்ப்புக்களின் மத்தியிலும் குருக்கள் வேத மந்திரங்கள் ஓத, எம்.பி. கவர்னர் ராம் நரேஷ் யாதவ், மற்றும் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் புடைசூழ புத்த சிலைக்கும் பல்கலைக்கழகத்துக்குமான அடிக்கல்லை நட்டு வைத்தார் மஹிந்த ராஜபக்ஷ.
அதியுச்ச பாதுகாப்பாக உலங்கு வானூர்தியில் சாஞ்சிக்கு வந்திருந்த ராஜபக்ஷவை மத்திய பிரதேச கலாசார மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் லக்ஷ்மிகாந்த் சர்மா வரவேற்றார்.
ஆசிய நாடுகளுக்கிடையே பரஸ்பர உறவை மேம்படுத்தும் நோக்கில் இந்திய ஆய்வுகளுக்காக கட்டப்படும் சாஞ்சி பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டுவது தனக்கு பெருமையாக இருப்பதாக கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் இருந்து கொண்டு வந்த மஹாபோதி அரச மரத்தினை சாஞ்சி பல்கலைக்கழகத்தில் புத்தர் சிலை நடுவதற்காக தன்னுடைய சிறப்புப் பரிசாக கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சாஞ்சியில் நடைபெற்ற புத்தமத பல்கலைக் கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குண்டுதுளைக்காத கூண்டு மேடையில் நின்றபடி ராஜபக்சே பேசியதாவது:
உலக நாடுகள் அனைத்தும் வெறுப்பு, பகையை சகித்துக் கொள்ள வேண்டும். இதில் கிழக்கு மற்றும் மேற்கத்திய பகுதிகளுக்கு சம முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சகிப்புத்தன்மை மற்றும் புரிந்துணர்வு மிகவும் அவசியம். பகை, வெறுப்பு வளர்ந்தால் வன்முறைக்கு வழிவகுத்து அழிவு ஏற்படும். சமுதாயத்திற்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும். நவீன இந்தியாவின் தலைசிறந்த மகன் மகாத்மா காந்தி. உலகில் அகிம்சை, சமாதானம் மற்றும் இரக்க குணம் ஆகியவற்றை பரப்ப வேண்டும் என்றார்.
மேலும் இலங்கையில் இருந்து அரச மரக் கிளையை சாஞ்சி பல்கலைக் கழகத்தில் நடுவதற்காக மகிந்த ராஜபக்ச கொண்டு வந்திருந்தார். அதுவும் நிகழ்ச்சியில் ஒப்படைக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications