சென்னை ஏர்போர்ட் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது: 5 பேர் காயம்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்களை சோதனை செய்யும் இடத்தில் இருந்த பால்சீலிங் இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் பயணிகளின் பொருட்களை சோதனை செய்யும் பகுதி உள்ளது. இங்கு பால்சீலிங் செய்யப்பட்ட மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. இதில் சில இடங்களில் விரிசல் ஏற்பட்ட நிலையில் இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணி அளவில் விரிசல் விட்டு தொங்கி கொண்டிருந்த பால்சீலிங் மேற்கூரை 25 அடி நீளத்திற்கு இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்ட ஊழியர்களில் 5 பேர் காயமடைந்தனர்.
உடனடியாக காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விமான நிலைய அதிகாரிகள் இடிபாடுகளை அகற்ற உத்தரவிட்டனர்.
இது குறித்து விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவத்தில் யாரும் பலியாகவில்லை என்றாலும், தரமற்ற முறையில் பால்சீலிங் அமைத்து கொடுத்த ஒப்பந்தக்காரரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications