களக்காடு மலையில் பயங்கர காட்டுத் தீ: அணைக்கப் போராடும் வனத்துறை
நெல்லை: களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. அதை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் அரிய மூலிகைச் செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து சாம்பலாகின.
களக்காடு புலிகள் காப்பக மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கடும் வறட்சி நீடிக்கிறது. அருவிகள் மற்றும் நீரோடைகள் தண்ணீரின்றி வறண்டதால் வனவிலங்குகள் குடிநீருக்காக கடுமையாக திண்டாடி வருகின்றன. மழை பெய்யாததால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி பசுமையை இழந்து காய்ந்து காணப்படுகிறது. எனவே, வனத்துறையினர் தீ தடுப்புக் கோடுகள் அமைத்து வந்தனர். மேலும் மலைப்பகுதியில் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் களக்காடு புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த திருங்குறுக்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட கண்ணொளி மொட்டை பகுதியில் இரு இடங்களில் நேற்று திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. இதில் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள காடுகளுக்கு தீ பரவியது. இந்த தீயில் மூலிகைச் செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து வருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications