இனி உள்ளாட்சித்துறை அலுவலகங்களில் குண்டு பல்பு கிடையாது- எல்.இ.டி. தான்: அரசு உத்தரவு

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நகராட்சிகளின் எரிசக்தி மற்றும் பராமரிப்பு செலவினை குறைக்கும் வகையில், திறன் குறைந்த குழல் விளக்குகளுக்குப் பதிலாக திறன் மிகுந்த எல்இடி/ சூரிய சக்தி மின்விளக்குகள் பயன்படுத்துதல்; தெரு விளக்குகள் ஒளிர்வதில் ஒளியின் அளவை மட்டுப்படுத்தும் முறையினை பின்பற்றி, மின் நுகர்வினை குறைப்பது; தெரு விளக்குகளை பயன்படுத்துவதில் மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு முறையினை பயன்படுத்தி, திறமையான பராமரிப்பு மேற்கொள்ளுதல்; ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
இதன்படி 201213 ஆம் ஆண்டில் பரிசோதனை முறையில் 9 மாநகராட்சிகள்; திருப்பூர் மற்றும் தஞ்சாவூர் மண்டலங்களிலுள்ள 35 நகராட்சிகள் மற்றும் 101 பேரூராட்சிகளில் தற்போது பயன்பாட்டிலுள்ள குழல் விளக்குகளுக்குப் பதிலாக எல்இடி போன்ற ஆற்றல் மிக்க மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கும் வகையில், நகராட்சி நிர்வாக ஆணையரகத்திற்காக, நகராட்சி நிர்வாக ஆணையரக தலைமைப் பொறியாளர் அவர்கள் தலைமையில் 9 நபர் கொண்ட தொழில் நுட்பக் குழுவும், நகராட்சி நிர்வாக ஆணையர் தலைமையில் 7 நபர் கொண்ட உயர்மட்ட அதிகாரக் குழுவும், பேரூராட்சிகளைப் பொறுத்தவரையில் பேருராட்சி இயக்குநர் அலுவலகத்தில் உள்ள நிர்வாகப் பொறியாளர் தலைமையில் 9 நபர் கொண்ட தொழில் நுட்பக் குழுவும், பேரூராட்சிகள் இயக்குநர் தலைமையில் 6 நபர் கொண்ட உயர்மட்ட அதிகாரக் குழுவும் அமைக்கப்படும். இதற்காக பொது ஏல ஆவணம் அறிமுகப்படுத்தியும், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் இதனை நடைமுறைப்படுத்தவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
உள் கட்டமைப்பு வசதி
அதேபோல் போதிய இடவசதி மற்றும் அடிப்படை வசதியின்றி இயங்கி வரும் சேலம் மாநகராட்சி மற்றும் ஓசூர், மறைமலைநகர், கொடைக்கானல், சங்கரன்கோவில், திருச்செங்கோடு, ராணிப்பேட்டை, தேனிஅல்லிநகரம், தர்மபுரி, துறையூர் மற்றும் பரமக்குடி ஆகிய 10 நகராட்சிகளுக்கு 37 கோடி ரூபாய் செலவில் புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட அரசு மானியமாக 26 கோடி ரூபாயினை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications