வைரவிழா: அக்.30-ல் சட்டசபை சிறப்புக் கூட்டம்-வருவார்களா கருணாநிதியும், விஜயகாந்த்தும்?
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக தமிழக சட்டமன்ற செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய அரசமைப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அமைக்கப்பட்டு, இவ்வருடம் 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதையடுத்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வைர விழா, 2012 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 29ஆம் நாள் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் நடைபெற உள்ளது என்பதை பேரவைத் தலைவரின் ஆணைப்படி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு ஆளுநர், சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை வருகிற அக்டோபர் 30ஆம் நாள் செவ்வாய்கிழமை காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications