கோவையில் தொடரும் கோரம்... காதலை உதறிய அத்தை மகளைக் கத்தியால் குத்திய வாலிபர்
கோவை: அமைதிக்குப் பெயர் போன கோவையில் தற்போது கொடும் வன்முறைகளை தலை தூக்கி வருவதை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. காதலித்து பின்னர் கைவிட் மாணவியை மிகக் கொடூரமாகக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட வாலிபரைத் தொடர்ந்து காதலித்து விட்டு பின்னர் மறுத்து விட்ட அத்தை மகளை வாலிபர் ஒருவர் சரமாரியாக குத்தி சாய்த்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
கோவை, குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மதன் குமார். எம்.காம் படித்துள்ளார். குமாரின் தந்தை நாகராஜனின் தங்கை மகள் ரம்யா. இவர் எம்.சி.ஏ படித்துள்ளார்.
அத்தை மகளான ரம்யாவை மதன்குமார் காதலித்து வந்துள்ளார். 5 வருடமாக இது நீடித்துள்ளது. இந்த நிலையில் திடீரென 3 மாதமாக தனது மாமன் மகன் மதன்குமாரை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளார் ரம்யா. மேலும் ஒருவரை காதலிக்கவும் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு காந்திபுரம் பகுதியில் ஒரு வாலிபருடன் ரம்யா சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தார் மதன்குமார். இதனால் கோபமடைந்த அவர் நேராக ரம்யாவிடம் போனார். அதைப் பார்த்துப் பயந்து போன ரம்யா தான் பேசிக் கொண்டிருந்த நபரின் காருக்குள் வேகமாக ஏறினார். கதவை மூடிக் கொண்டார். ஆனால் காருக்குள் புகுந்து ரம்யாவை வெளியே இழுத்த மதன்குமார், ரம்யாவை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ரம்யா படுகாயமடைந்து அலறினார்.
உடனே திரண்ட மக்கள் மதன்குமாரை தடுத்துப் பிடித்தனர். போலீஸார் விரைந்து வந்து ரம்யாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தொடர்ந்து இப்படிக் காதலின் பெயரால் கோவையில் தொடர்ந்து கொலை, கொலை முயற்சி, தற்கொலை என்று வன்முறை தலையெடுத்து வருவது மக்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications