முதல்வரை சந்திக்க வழியில் காத்திருந்த முதியவர்: நேரில் அழைத்து வாழ்த்தினார் ஜெயலலிதா

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னை, லாயிட்ஸ் சாலையில் வசிக்கும் 75 வயதான தச்சுத்தொழில் செய்து வரும் எம்.ஆறுமுகம். நீண்ட நாட்களாக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் கண்டு வாழ்த்து பெற வேண்டும் என்று விரும்பினார். அதற்காக முதல்வர், தலைமைச்செயலகம் வந்து செல்லும் வழியில் தினமும் காத்திருந்தார்.
நீண்ட நாட்களாக எம்.ஆறுமுகம் தம்மை காண்பதற்காக காத்திருப்பதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, அவரை தலைமைச் செயலகத்தில் தன்னை நேரில் சந்திக்க அனுமதித்தார். அதன் அடிப்படையில் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வரை, எம்.ஆறுமுகம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது ஆறுமுகம் கூறுகையில், தான் நீண்டநாள் கட்சிக்காரர் என்றும், தனது குடும்பம் முதல்வர் மீது எப்பொழுதும் விசுவாசமாக உள்ளவர்கள் என்றும் தெரிவித்தார். நல்ல உடல் ஆரோக்கியத்தோடு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று ஆறுமுகத்தை முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தினார்.
ஏழை, எளியவனான தன்னை நேரில் அழைத்து முதல்வருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதித்து, தன்னை வாழ்த்தியமைக்காக தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications