இன்று மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் அணு உலை எதிர்ப்பாளர்கள்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: கூடங்குளம் போராட்டக்காரர்கள் மத்திய அரசு அலுவலகங்களை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர். மத்திய அரசு அலுவலகங்கள் இல்லாத இடங்களில் கல்லறைகளில் குடியேறும் போராட்டம் நடத்தப்படுகிறது.

கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும், இடிந்தகரை, மணப்பாடு, தூத்துக்குடி தடியடி சம்பவத்திற்கு நீதி விசாரணைக் குழு அமைக்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டு்ள்ள மக்களிடம் முதல்வர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளி்ட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் கடந்த 8ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

போராட்டத்தின் முதல் கட்டமாக கடந்த 22ம் தேதி போராட்டக்குழுவினர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் படகுகளில் கடல் வழியே சென்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை முற்றுகையிட்டனர். அடுத்த கட்டமாக சென்னை கோட்டையை முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே படகுகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக போராட்டக்குழுவினர் அறிவித்தனர். இதனையடுத்து நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நாட்டுப் படகுகளில் ஒரு பகுதி மட்டுமே மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. விசைப்படகுகளும் நேற்று முன்தினம் மாலையில் ஐஸ்கட்டிகளை நிரப்பி தயார் நிலையில் இருந்தன.

ஆனால் நேற்று காலையில் எதிர்பார்க்கப்பட்டது போல் விசைப்படகுகள் மீ்ன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் நாளை முதல் விசைப்படகுகள் வேலை நிறுத்தம் வாபஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாவட்டம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தலைமை போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+