'வாட்டர் பில்ட்டர்' விளம்பர தூதரானார் 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின்!

லுமினோஸ் வாட்டர் டெக்னால்ஜி பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தின் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் லைவ்பியூர் ரிவைஸ் ஆஸ்மோசிஸ் வாட்டர் பியூரிபையர். அதிநவீன தொழில்நுட்பத்துடன் குடிநீரை தூய்மையாக்கும், இந்த தயாரிப்பிற்கு இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பல விளம்பரங்களில் நடித்து வரும் சச்சின், வருங்காலத்தில் லைவ்பியூரின் விளம்பரத்திலும் தோன்றுவார்.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட சச்சின், லைவ்பியூர் குடிநீர் சுத்திகரிப்பு சாதனை குறித்து பேசினார். அப்போது அவர், அதிநவீன தொழிற்நுட்பத்துடன் செயல்படும் இச்சாதனம், பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெறும் என்றார்.
விழாவில் லுமினோஸ் நிறுவனத்தின் தலைவர் ராகேஷ் மல்ஹோத்ரா கூறியதாவது,
குடிநீர் சுத்திகரிப்பு தொடர்பான சாதனங்கள் தயாரிப்பில் எங்கள் நிறுவனம் ரூ.500 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம் வரும் 2017ம் ஆண்டிற்குள் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியாட்களிடம் இருந்து எந்த முதலீடும் பெறப்படவில்லை என்றார்.
லுமினோஸ் நிறுவனத்தின் முதலீட்டு தொகையில் ரூ.200 கோடி மூலம் தயாரிப்பு, ஆராய்ச்சி, வளர்ச்சி ஆகிய பணிகள் நடைபெறும். மீதமுள்ள ரூ.300 கோடி மூலம் நுகர்வோர் சந்திப்பு மற்றும் விற்பனை கூடங்கள் அமைக்கப்பட உள்ளது.
தொலைத்தொடர்பு மற்றும் எலக்ட்ரிக்ஸ் துறையில் சிறந்து விளங்கும் லுமினோஸ் நிறுவனம், இரு வகையான வாட்டர் பில்ட்டர்களை தயாரித்து வெளியிட தீர்மானித்துள்ளது. இதில் 'டெச்' என்ற பெயரிலான வாட்டர் பில்ட்டர் ரூ.15,999 விலையும், 'டெச் ப்ளஸ்' என்ற பெயரிலான வாட்டர் பில்ட்டர் ரூ.16,999 விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக லுமினோஸ் நிறுவனத்துடன் விளம்பரத்துறையில் இணைந்து செயலாற்றி வரும் சச்சின், தற்போது லைவ்பியூர் சாதனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications