பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று 80வது பிறந்தநாள்: ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 80வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 1932ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி தற்போதைய பாகிஸ்தானில் பிறந்தார். இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு அவரது குடும்பத்தார் இந்தியா வந்தனர். அவரது தந்தை ஒரு ஏழை வியாபாரி. அவருக்கு மன்மோகனையும் சேர்த்து 10 குழந்தைகள். ஏழை வியாபாரியின் மகனாகப் பிறந்தாலும் கல்வியால் உயர்ந்தவர் மன்மோகன் சிங்.

மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், நிதியமைச்சர் என்று படிப்படியாக உயர்ந்து கடந்த 2004ம் ஆண்டு பிரதமர் ஆனார். மேலும் கடந்த 2009ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து அவர் இரண்டாவது முறையாக பிரதமர் ஆனார். இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவரும் அவரே.

பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான அவர் இன்று தனது 80வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் மன்மோகன் சிங்கிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

உங்கள் பிறந்த நாளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நீங்கள் மரியாதைக்குரிய தலைவராகவும், ஆட்சி வல்லுனராகவும், பொருளாதார நிபுணராகவும் திகழ்கிறீர்கள். இந்திய பொருளாதார சீர்திருத்த சிற்பியாக நீங்கள் எடுத்த நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி அடைந்திருக்கிறது. உங்கள் தனிப்பட்ட பங்களிப்பால் இந்திய, ரஷ்ய உறவுகள் மிகச்சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி வாழ்த்து:

திமுக தலைவர் கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், தாங்கள் இது போன்று இன்னும் பல பிறந்த நாட்களை காண வேண்டும் என்ற எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தாங்கள் தயவு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாடாராளுமன்ற ஜனநாயக வரலாற்றில், இந்தியா ஒரு இக்கட்டான கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. நாடு சந்தித்து வரும் சவால்களுக்கும், பிரச்சனைகளுக்கும் பயனுள்ள தீர்வுகளை காண, நீங்கள் மிகப் பெரிய அளவில் முக்கிய பங்காற்றி வருகிறீர்கள்.

இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதியினராக உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை மற்றும் எளிய மக்கள் தங்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய உங்களை எதிர்பார்க்கின்றனர். தங்களின் ஆழ்ந்த அறிவும், அர்த்தமுள்ள அனுபவங்களையும் கொண்டு இவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள், நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என மீண்டும் வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+