பாக். அமைச்சர் ஹீனாவுடன் பெனாசிர் மகன் தொடர்பு.. விவரம் சேகரிக்கும் கணவர்

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கருக்கும்(34), அந்நாட்டு அதிபரின் மகனும், ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோவுக்கும்(24) இடையே காதல் என்று பாகிஸ்தானில் பல வாரங்களாக கிசுகிசுப்பட்டது. இந்நிலையில் வங்கதேச பத்திரிக்கை ஒன்று இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது.
தன்னைவிட கிட்டத்தட்ட 11 வயது குறைவான(நவம்பரில் அவருக்கு வயது 35) பிலாவலை அவர் காதலிக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் பாகி்ஸ்தானை விட்டு வெளியேறி ஸ்விட்சர்லாந்தில் செட்டிலாக முடிவு செய்துள்ளனராம். இது குறித்து அறிந்த சர்தாரி ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான ஹீனாவை மணக்கக் கூடாது என்று தனது மகனைக் கண்டித்துள்ளாராம். அதற்கு பிலாவல் மணந்தால் ஹீனாவைத் தான் மணப்பேன் என்று கூறியுள்ளாராம்.
ஹீனாவை பிலாவல் மணந்தால் அவரது அரசியல் வாழ்க்கை அடியாகிவிடுமே என்ற கவலையில் சர்தாரி உள்ளார் என்று அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. இந்த செய்தி உண்மையா, பொய்யா என்று பலரும் குழம்பிய நிலையில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது ஹீனாவின் தொழில் அதிபர் கணவரான பிரோஸ் குல்சார் தனது மனைவி யார், யாருக்கு போன் செய்து பேசுகிறார் என்ற தகவலைக் கேட்டு மத்திய புலனாய்வுத் துறையின் உதவியை நாடியுள்ளாராம்.
அதிலும் குறிப்பாக ஹீனா போன் செய்யும் இரண்டு எண்கள் யாருடையது என்று தெரிந்து கொள்ள அவர் விரும்புகிறாராம். இதன் மூலம் ஹீனா-பிலாவல் காதல் வதந்தி அல்ல என்று பலரும் பேச ஆரம்பித்துள்ளனர்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடைசியில் 'உள்துறையே' பெரும் குழப்பமாகி விட்டது கொடுமைதான்...!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications