ஐபோன்களை தீயில் போட்டுக் கொளுத்துங்கள்.. யூதர்களுக்கு மத குரு கட்டளை
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக யூத மதத்தின் பழமைவாதப் பிரிவைச் சேர்ந்த மத குரு ரபி சயிம் கனிவெஸ்கி என்பவர் யூத நாளிதழான யாதேத் நீமன் என்ற பேப்பரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் யூத மதக் கோட்பாடுகளை மீறுவதாக உள்ளது. அதை யூதர்கள் பயன்படுத்தக் கூடாது, வாங்கக் கூடாது, வாங்கி விட்டால் அதை தீயில் போட்டுக் கொளுத்தி விடுங்கள் என்று கூறியுள்ளார்.
யூத மதத்தின் புனித மாதம் தொடங்கியுள்ள நிலையில் இந்த கட்டளையை அந்த மத குரு பிறப்பித்துள்ளார் என்பதால் பரபரப்பாகியுள்ளது.
யூத மதத்தின் கொள்கைப்படி யாரும் ஐபோன் உள்ளிட்டவற்றை வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் தனது உத்தரவுக்கான காரணத்தைக் கூறியுள்ளார் ரபி. யூதர்கள் டிவி, கம்ப்யூட்டர்கள் என எதையுமே பயன்படுத்தக் கூடாது என்றும் இவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications