கீவ்: உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த உடை என்று வர்ணிக்கப்படும் ஒரு உடை உக்ரைன் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வைரம் மற்றும் தங்கத்தில் இந்த உடை நெய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 50 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவை 2 காரட் தரத்திலானவை. மொத்தம் 13 கிலோ எடையில் இந்த உடை உள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த டெப்பி விங்காம் என்பவர் இதை வடிவமைத்துள்ளார். உக்ரைனில் நடந்த பேஷன் வார நிகழ்ச்சியின்போது இந்த உடையை அறிமுகப்படுத்தினார் டெப்பி. கையாலேயே இதை நெய்தும், தைத்தும் உருவாக்கியுள்ளார் டெப்பி. ஆறு மாதங்கள் இதற்கு அவகாசம் பிடித்துள்ளது.
கேட் வின்ஸ்லெட், ஹில்லாரி ஸ்வாங்க், அமி ஸ்மார்ட், கேத்தரின் ஜென்கின்ஸ், ரெபெக்கா பெர்குசன் உள்ளிட்ட திரைப்பட நட்சத்திரங்களின் பேஷன் டிசைனராக டெப்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The saying diamonds are a girl’s best friend has been taken to a whole new level as the world's most expensive dress has been unveiled. The dazzling dress, which received mixed reviews from onlookers at Ukraine Fashion Show, is encrusted with 50 two carat black diamonds and weighs a staggering 29lbs (13kg).