அதிமுகவிலிருந்து 2 மகளிர் அணி நிர்வாகிகள் நீக்கம்- நிர்வாகிகள் மாற்றம்
சென்னை: அதிமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளில் பலரை மாற்றம் செய்துள்ளார் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா. அதே போல புதுக்கோட்டை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் உசிலை ராணி, புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த சோனா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வேளியூர் எம்.தனசேகரன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை தொகுதி செயலாளராக கே.முனுசாமி (சின்ன தகரகுப்பம், செங்காடு), வாலாஜாபேட்டை ஒன்றிய செயலாளராக என்.சி.பூங்காவனம் (ராமர்கோயில்) ஒன்றிய பொருளாள ராக பி.வி.மூர்த்தி (பாகவெளி) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மேற்கு மாவட்ட பொருளா ளராக எம்.எஸ்.என்.குமார் (சிதம்பரம் நகரமன்ற முன்னாள் தலைவர்), எம்ஜிஆர் மன்ற செயலாளராக வாகை வி.இளங்கோவன், மாவட்ட மாணவர் அணி செயலாளராக பி.செந்தில்குமார், விவசாயப் பிரிவு செயலாளராக ஏ.எல்.குணசேகரன், மருத்துவ அணி செயலாளராக டாக்டர் எஸ்.பாலசுப்பிரமணியம், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவராக ஏ.டி.ஆனந்த், மாவட்ட செயலாளராக கே.எஸ்.கே.பாலமுருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டம் சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளராக சி.அசோகன், சோளிங்கர் மேற்கு ஒன்றியசெயலாளராக எஸ்.சின்னதுரை, ஆற்காடு நகர செயலாளராக ஜிம்.எம்.சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்டம் கடையம் ஒன்றிய செயலாளராக ஆர்.டி.அருவேல்ராஜ், ஆலங்குளம் ஒன்றிய செயலாளராக என்.எச்.எம்.பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மகளிர் அணி செயலாளர் உசிலைராணி, புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த சோனா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications