இலங்கையை நிர்மூலமாக்கத்தான் இந்தியாவில் ஏவுகணை சோதனைகளா?
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இந்தியாவின் அனைத்து ஏவுகணை சோதனைகளுமே இலங்கையின் முக்கிய நகரங்கள், துறைமுகங்களை குறிவைத்து அழிக்கத்தான் என்று ஒரு இணையதளத்தில் வெளியான செய்தியை இந்திய தூதரகம் மறுத்துள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உள்நாட்டு பாதுகாப்புக்காக நடத்தப்படும் இந்த சோதனைகள், எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. இந்திய ஏவுகணைகள் இலங்கை தளங்களை குறிவைப்பதாக வெளியான செய்தி முற்றிலும் ஆதாரமற்றது; ஜோடிக்கப்பட்டது. பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா-இலங்கை இடையே நெருங்கிய உறவு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications