மன்மோகன் சிங்கின் மகள், மருமகன் ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்
திருச்சி : பிரமதர் மன்மோகன்சிங்கின் மகள் உபிந்தர் சிங் தனது கணவருடன் திருச்சி தாயுமானவர் சுவாமி கோவிலிலும், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார். அவர்களின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உபிந்தர் சிங், டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியையாக உள்ளார். இவர் தனது கணவர் விஜய்தாங்காவுடன் தமிழகத்தில் ஒரு வார பயணம் மேற்கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள் மற்றும் இடங்களை பார்வையிடுகிறார். இதற்காக அவர்கள் இன்று காலை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சி வந்தனர்.
சிறிது நேர ஓய்வுக்குப்பின்னர், காலை 9 மணியளவில் உபிந்தர் சிங்கும், கணவர் விஜய்தாங்காவும் மலைக்கோட்டை தாயுமானவர் சாமி மற்றும் உச்சி பிள்ளையார் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தனர். அதன்பின் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலுக்கும் சென்று சுவாதி தரிசனம் செய்தனர். இரவு திருச்சியில் தங்கும் அவர்கள், ஞாயிறு காலை தஞ்சைக்கு புறப்பட்டு செல்கின்றனர். தஞ்சாவூர், கும்பகோணத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்யும் அவர்கள் அக்டோபர் 2ம் தேதி இரவு சிதம்பரம் சென்று நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
பிரதமரின் குடும்பத்தினர் வருகையை ஒட்டி திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம் கோவில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications