அரை மணி நேரம் கட்டிப்புரண்டு சண்டை போட்ட பெண்கள்.. திகைத்து நின்ற போலீஸ்!
தஹரான், சவூதி அரேபியா: சவூதி அரேபியாவின் தஹரான் என்ற நகரில் ஒரு ஷாப்பிங் மாலில், பெண்களுக்கு இடையே திடீரென ஏற்பட்ட மோதலால் அரை மணி நேரம் அந்த ஷாப்பிங் மால் பெரும் களேபரமாகி விட்டது. பெண்கள் போட்ட சண்டையை விலக்க முடியாமல் ஆண் போலீஸார் தவித்து நின்றனர். இந்த அரை மணிநேர சண்டையில் பல பெண்களுக்குக் காயம் ஏற்ப்ட்டது.
தஹரான் நகரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் பர்ச்சேஸ் செய்து கொண்டிருந்த சில பெண்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் பெரும் சண்டையாக மாறியது. ஆளாளுக்கு தலையைப் பிடித்தும், செருப்புகளை எடுத்து அடித்துக் கொண்டும், கையில் இருந்த பேக்குகளால் சரமாரியாக அடித்தும் சண்டை போட ஆரம்பித்தனர்.
இதையடுத்து அங்கிருந்த போலீஸார் ஓடி வந்தனர். ஆனால் அவர்கள் அத்தனை பேரும் ஆண் போலீஸார். சவூதி நாட்டுச் சட்டப்படி ஆண்கள் பெண்களைத் தொடக் கூடாது. எனவே அவர்கள் சண்டையை விலக்கி விட முடியாமல் திகைத்து நின்றனர். இதையடுத்து பெண் போலீஸாருக்குத் தகவல் போனது. ஆனால் அவர்கள் ஆடி அசைந்து வருவதற்குள் சண்டை மேலும் உக்கிரமாகி விட்டது.
மாலில் இருந்த கடைகளுக்குள் ஓடி ஓடி சண்டை போட்டனர் அந்தப் பெண்கள். இதனால் அங்கிருந்த பலர் காயமடைந்தனர். குறிப்பாக பெண்கள்தான் பலர் காயமடைந்தனர்.
ஒரு வழியாக ஓடி வந்த பெண் போலீஸார், சண்டை போட்ட பெண்களை கடும் சிரமத்துக்கு மத்தியில் விலக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சண்டையால் அந்தப் பகுதியே போர்க்களம் போல காணப்பட்டது. மேலும் தரை முழுவதும் செருப்புகள் சிதறிக் கிடந்தன. அவை அனைத்தும் அங்கிருந்த செருப்புக் கடையில் வைக்கப்பட்டிருந்த செருப்புகளாகும்.
சும்மாவாச் சொன்னாங்கே, பொம்பளை கிட்ட வம்பு வச்சுக்காதேன்னு...!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications