வாசன் கோஷ்டி மீண்டும் வெற்றி-மீண்டும் இளைஞர் காங்கிரஸ் தலைவரான யுவராஜ்
சென்னை: தமிழக இளைஞர் கங்கிரஸ் தலைவராக யுவராஜ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகளை தேர்வு செய்ய வாக்கு எண்ணிக்கை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களை தவிர மற்றவர்கள் சத்திய மூர்த்திபவன் வளாகத்துக்குள் அனுமதிக்கவில்லை. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொருளாளர் லிஜூ முடிவுகளை அறிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களில், யுவராஜ் 6,557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3,657 வாக்குகள் பெற்ற விஜய் இளஞ்செழியன் துணை தலைவராகவும், 2,119 வாக்குகள் பெற்ற நாசே ஆர்.ராஜேஷ் மாநில பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மற்ற பதவிகளுக்கு வெற்றி பெற்றவர்கள் பட்டியல் 2 நாட்களில் வெளியிடப்படும் என்றார்.
தமிழக இளைஞர் கங்கிரஸ் தலைவராக மீண்டும் வெற்றி பெற்ற யுவராஜூக்கு, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் மாநில தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக வெற்றி பெற்ற யுவராஜ் கூறுகையில், எனக்கு வாக்களித்த தொண்டர்களுக்கும், எனது வெற்றிக்கு பாடுபட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications