தீவிர அரசியலில் குதித்தார் அரவிந்த் கேஜ்ரிவால்

ஊழலை ஒழிப்போம் என்று களம் இறங்கியவர் அன்னா ஹசாரே. அவருடன் கை கோர்த்தவர்களில் அர்விந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா போன்றோரும் அடக்கம். தொடக்கத்தில் மக்களிடத்தில் ஆதரவு பெற்றிருந்த அன்னா ஹசாரே, ஒவ்வொரு விவகாரத்திலும் அந்தர்பல்டி அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் மக்களின் ஆதரவு சட்டென குறைந்துபோய்விட்டது. இதனால் அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்துப் பார்த்தார். பின்னர் அப்படியெல்லாம் அரசியல் கட்சித் தொடங்க மாட்டேன் என்றார்.
ஆனால் அன்னா ஹசாரே குழுவில் இருந்த கெஜ்ரிவால் தனி தலைவராக தம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டார். அரசியல் ஆசை அப்படி ஒன்றும் அர்விந்த் கெஜ்ரிவாலிடம் எளிதாக அகன்று போகவில்லை. ஒருகட்டத்தில் ஹசாரே கட்சி தொடங்காவிட்டாலும் தாம் தொடங்கிவிடுவது என்று முடிவெடுத்தார். இதில் அன்னா ஹசாரே கடுப்பாகிப் போனார். ஆத்திரத்தில் தமது பெயரையும் படத்தையும் கெஜ்ரிவால் கோஷ்டி பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டார். இதனால் அன்னா ஹசாரே குழு இரண்டாக உடைந்தது.
இந்நிலையில் அரசியல் அழுக்கு நிறைந்தது என்று ஹசாரே விமர்சித்திருந்தார். அப்போது திடீரென கெஜ்ரிவாலையும் சந்தித்துப் பேசினார். இந்த சந்திக்குப் பிறகு, நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வந்தால் மாற்றங்களை உருவாக்க முடியும் என்று அந்தர்பல்டி அடித்தார் அன்னா ஹசாரே.
காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு காந்திய கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறும் கெஜ்ரிவால் இன்று அரசியலில் குதித்தார்.
பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. ஆனால் கெஜ்ரிவால் கட்சி இந்த தேர்தல்களில் போட்டியிடவில்லை. 2013ஆம் ஆண்டு டெல்லி மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.
ஆக கெஜ்ரிவால் அரசியல் கல்லாவை திறந்து வெச்சுட்டாரு...போணியாகுமா?












Click it and Unblock the Notifications