மோதல் வழக்கு: முன்னாள் மதுரை துணை மேயர் மன்னனுக்கு ஜாமீன்
நெல்லை: திருச்செந்தூர் இடைத்தேர்தலின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் திமுகவை சேர்ந்த முன்னாள் மதுரை துணை மேயர் மன்னன், திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமீன் பெற்றார்.
கடந்த 2009ம் ஆண்டு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் 3.12.2009 அன்று குலசேகரபட்டிணம் பைபாஸ் சாலையில் திமுக, அதிமுக கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக குலசேகரப்பட்டிணம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்தனர். இந்த நிலையில் தற்போது இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட திமுகவினரை கைது செய்ய போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னன், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கோபி ஆகியோர் தூத்துக்குடி அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த நீதிமன்றம், மன்னன், கோபி ஆகியோரை திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜாராகி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் நேற்று திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜாராகினர். நீதிபதி நம்பிராஜன் இருவருக்கும் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications