லண்டனில் இந்திய ராணுவ ஜெனரலை தாக்கியது சீக்கிய தீவிரவாதிகளே!

சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலில் பிந்தரன்வாலே தலைமையிலான தீவிரவாதிகள் ஆயுதங்களைக் குவித்து வைத்ததையடுத்து அங்கு ராணுவம் நுழைந்தது. தீவிரவாதிகளை ராணுவம் ஒடுக்கியது.
இதைடுத்து சீக்கிய பாதுகாவலர்களால் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலை முன்னின்று நடத்திய லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ். பிரார் தீவிர பாதுகாப்பில் வசித்து வருகிறார். இந் நிலையில் சில நாட்களுக்கு முன் மனைவியுடன் லண்டன் சென்ற அவரை 4 பேர் கொண்ட கும்பல் ஹோட்டல் அறையில் புகுந்து கடுமையாகத் தாக்கியது.
இதில் அவர் மிக பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு பஞ்சாப் மாநில அரசு தான் பாதுகாப்பு அளித்து வருகிறது. இவர் வெளிநாடு சென்றாலும் மத்திய அரசிடம் பேசி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது பஞ்சாப் அரசு தான்.
ஆனால், இவரது லண்டன் பயணம் குறித்து எந்த கவலையும்படாமல் இருந்துள்ளது பஞ்சாபை ஆளும் அகாலிதள அரசு. இந் நிலையில் தான் லண்டனில் இவரையும் இவரது மனைவியையும் ஒரு கும்பல் தாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதலை நடத்தியது காலிஸ்தான் கோரும் தீவிரவாதிகள் தான் என்றும், பொற்கோவிலுக்குள் நடந்த தாக்குதலில் இறந்த சீக்கிய தீவிரவாதிகளுக்கு கோவிலுக்குள்ளேயே நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதை மாநில அரசு தடுக்கவில்லை என்றும், தீவிரவாதிகளுக்கு மாநில அரசு முழு ஆதரவு தந்து வருவதாகவும் பிரார் குற்றம் சாட்டியுள்ளார்.
தீவிர சிகிச்சையில் உள்ள அவர் அடுத்த சில நாட்களில் நாடு திரும்பவுள்ளார். தாக்குதல் நடக்கும் வரை லண்டனில் எந்தப் பாதுகாப்பையும் ஏற்பாடு செய்யாத இந்தியா இப்போது இவருக்கு முழுப் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இங்கிலாந்து ராணுவ அதிகாரி தலைமையில், ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் இவருக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
மேலும் இந்திய உளவுப் பிரிவினரான ரா அதிகாரிகளும் அங்கு விசாரணையில் இறங்கியுள்ளனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications