சோனியாவின் சிகிச்சைக்கு அரசு எந்த செலவும் செய்யவில்லை: தகவல் ஆணையம்- மோடியின் புகார் 'புஸ்'!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருத்துவச் செலவுக்காக மத்திய அரசு எந்த செலவும் செய்யவில்லை என்று தேசிய தகவல் ஆணையம் கூறியுள்ளது. இதன்மூலம் இந்த விஷயத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி ஆகியோர் சொல்லி வரும் புகார்கள் தவறானவை என்பது உறுதியாகியுள்ளது.
சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள், தங்கும் செலவு, மருத்துவ செலவுக்காக மத்திய அரசு ரூ. 1,880 கோடி செலவிட்டுள்ளதாக முதலில் சாமியும் பின்னர் மோடியும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந் நிலையில் இது தொடர்பாக மத்திய தகவல் ஆணையத்திடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு நவீன் குமார் என்பவர் மனு செய்தார். இதற்கு பிரதமர் அலுவலகம், வெளியுறவுத்துறை மற்றும் மத்திய அரசின் பிற துறைகளிடம் இருந்து விவரம் பெற்று உடனடியாக பதில் தந்துள்ளது தகவல் ஆணையம்.
அதில், சோனியா காந்தியின் மருத்துவச் செலவுக்காக மத்திய அரசின் எந்தத் துறையும் எந்த செலவையும் செய்யவில்லை. இதுவரை அரசுக்கு இந்த விஷயத்தில் எந்த செலவும் ஏற்படவில்லை.
அதே நேரத்தில் இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ சிகிச்சைக்காக சோனியா செலவிட்ட தொகை என்பது அவரது தனிப்பட்ட விஷயம். எந்த தனிப்பட்ட நபரின் சொந்த செலவு குறித்தும் தகவல் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்க முடியாது என்று கூறியுள்ளது ஆணையம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications