மார்ச்சில் லோக்சபா தேர்தல் வரும், காங். கூட்டணி மோசமாக தோற்கும்- சாமி

இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனேகமாக பிப்ரவரி, மார்ச் மாதத்தில் லோக்சபாவுக்கு இடைத் தேர்தல் வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் அப்படித்தான் எனக்குக் கூறுகின்றன. இடைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மோசமான தோல்வி கிடைக்கும்.
ஊழல் பிரச்சினைகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் சமாளிக்க முடியவில்லை. மேலும் தீவிரவாதத்தையும் அது கட்டுப்படுத்தத் தவறி விட்டது. இவையெல்லாம் லோக்சபா தேர்தலில் முக்கியப் பிரச்சினைகளாக எதிரொலிக்கும்.
மூன்றாவது அணி அமைவது சாத்தியமில்லை. தற்போதைய சூழலில் அதற்கான வாய்ப்பும் இல்லை என்றே கருதுகிறேன்.
தற்போதைய மத்திய அரசு மிகவும் மோசமான அரசு. இதன் மீது மக்கள் எப்போதோ நம்பிக்கையை இழந்து விட்டனர். இது எவ்வளவு சீக்கிரம் போகிறதோ, அவ்வளவுக்கு மக்களுக்கு நல்லது.
சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடுகளை அமைத்தால் இந்தியாவில் உள்ள பல கோடி சிறு வர்த்தகர்களின் வாழ்க்கை பறி போய் விடும். அவர்களால் அன்னிய நிறுவனங்களுடன் போட்டி போட முடியாது. அவர்களது வாழ்க்கை பரிதாபகரமாக மாறி விடும்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ. 1880 கோடி செலவிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கும், நாட்டு மக்களுக்கும் இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டும். இது அக்கட்சியின் கடமையாகும் என்றார் சாமி.
சாமி இப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதாக அவரே பலமுறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications