தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது: கர்நாடக தமிழ்ச் சங்கம்
பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரி நதிநீரை திறந்துவிடக் கூடாது என்று கர்நாடக தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் 9 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டது. இதனை கர்நாடகம் ஏற்க மறுத்தது. பினன்ர் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. உச்சநீதிமன்றமும் தமிழகத்துக்கு காவிரி நதிநீரை திறந்துவிட உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டது.
இதற்கு பல்வேறு கன்னட அமைப்புகளும், விவசாயிகளும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் உள்ள தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பும் தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கர்நாடக தமிழ்ச் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று மைசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கர்நாடக தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் புகழேந்தி, கர்நாடகாவில், கன்னட தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். கர்நாடகத்தில் வாழும் கன்னடர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டபோதெல்லாம், தமிழ்ச் சங்கங்கள் ஒன்றாக இணைந்து கன்னட சகோதரர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் தற்போது கர்நாடகத்தில் வசிப்பவர்களுக்கே குடிக்க தண்ணீர் இல்லை. விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆடு, மாடுகளுக்கு கூட தண்ணீர் இல்லை. தீவனம் இல்லை.இந்தநிலையில் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விட்டது சரியல்ல. தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு தடை செய்ய வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக மைசூர் அரண்மனை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை கர்நாடக தமிழ்ச் சங்க கூட்டமைப்பு சார்பில் மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications