ஒரு லிட்டர் பெட்ரோலில் ரூ. 2 லாபம் அடிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்.. விலையை குறைப்பார்களா?
மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதாலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாலும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 1.60 வரை குறைக்கலாம். ஆனால், அதைக் குறைக்காமல் லாபம் அடித்து வருகின்றன மத்திய எண்ணெய் நிறுவனங்கள்.
சர்வதேச சந்தையில் விலை உயர்ந்தால் உடனடியாக விலையை உயர்த்தும் இதே எண்ணெய் நிறுவனங்கள், இப்போது விலை குறைந்துள்ள நிலையில், விலையைக் குறைக்காமல் இழுத்தடித்து வருகின்றன.
இப்போதைய நிலவரப்படி ஒரு லிட்டருக்கு மத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 2 வரை லாபம் கிடைத்து வருகிறது.
இதையடுத்து விலையை உடனே குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகைகள் வலுவடைந்துள்ளன. இதைத் தொடர்ந்து லிட்டருக்கு ரூ. 1.60 வரை விலையைக் குறைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.
ரூ. 2 வரை குறைத்துவிட்டால், அடுத்து ரூபாய் மதிப்பில் சிறிய சரிவு ஏற்பட்டால் கூட விலையை உயர்த்த வேண்டி வரும் என்பதால் 40 பைசா லாபத்தை வைத்துக் கொண்டு விலையை ரூ. 1.60 மட்டும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியாகலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications