சென்னை, திருவள்ளுர் மாவட்டத்தில் 9 கவுன்சிலர் உட்பட 51 பேரின் கட்சி பதவி பறித்து ஜெ. உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Jayakumar
சென்னை: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் 9 கவுன்சிலர்கள் உட்பட 51 பேரின் கட்சிப் பதவியை பறித்து தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவர்களில் பெரும்பலானோர் பதவி விலகிய முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

வடசென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் இளநீர் கே.முத்து, வடசென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பி.கார்த்திகேயன், வடசென்னை வடக்கு மாவட்ட மீனவர் பிரிவு துணைச் செயலாளர் இ.சேகர், ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் எஸ்.சந்தானம், ஆர்.கே.நகர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.அண்ணாமலை, ஆர்.கே. நகர் பகுதி எம்.ஜி.ஆர்.

இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஆர்.அன்பு (எ) அன்பழகன், துணைச் செயலாளர் கே.ஆர்.காந்த், ஆர்.கே.நகர் பகுதி இளைஞர் பாசறை, இளம்பெண் பாசறை துணை தலைவர் இ.அகஸ்டின்பிரபு.

4-வது வட்ட செயலாளர் எஸ்.பரிமளா, 14-வது வட்ட செயலாளர் கே.குப்பன், மேலமைப்பு பிரதிநிதி கே.தேவகி, வடசென்னை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் ஜி.கிருஷ்ண மூர்த்தி, வடசென்னை தெற்கு மாவட்ட வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் எல்.சுதாகர், வடசென்னை தெற்கு மாவட்ட மீனவர் பிரிவு துணை செயலாளர் இ.சேகர், துறைமுகம் பகுதி செயலாளர் வீடியோ கே.சம்பத்.

ராயபுரம் பகுதி செயலாளர் இரா.பழனி (கவுன்சிலர்), ராயபுரம் பகுதி எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பி.துளசிதாஸ், ராயபுரம் பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆசைதம்பி, துணை செயலாளர் பெ.சங்கர், ராயபுரம் பகுதி மகளிர் அணி செயலாளர் எஸ்.நாகம்மாள் (கவுன்சிலர்), இணைச் செயலாளர் எம்.ஜெயந்தி, ராயபுரம் பகுதி மீனவர் பிரிவு செயலாளர் ஜெ.ஜெ.குமார், ராயபுரம் பகுதி அண்ணா தொழிற்சங்க தலைவர் கே.என்.ரூபன், ராயபுரம் பகுதி 2-வது வட்ட பாகச் செயலாளர் வி.சி.பிரகாஷ், ராயபுரம் பகுதி 9-வது வட்ட செயலாளர் என்.பி.சாரதி.

12-வது வட்ட செயலாளர் டி.கந்தன், 13-வது வட்ட செயலாளர் எஸ்.எம்.ரிஸ்வான், 15-வது வட்ட செயலாளர் ஏ.சந் திரன், 16-வது வட்ட செயலாளர் இரா.உதயன், 17-வது வட்ட துணைச் செயலாளர் எஸ்.மைலப்பன், 18-வது வட்ட செயலாளர் வி.குப்பன், துணைச் செயலாளர் பட்டாணி வெங்டேஷ், 19-வது வட்ட செயலாளர் வை.மணி, துணைச் செயலாளர் டி.பச்சையம்மாள், பொருளாளர் ஏ.குப்பன்.

20-வது வட்ட செயலாளர் ஜி.ராதா, 21-வது வட்ட செயலாளர் அ.தேவன், 22-வது வட்ட செயலாளர் கா.யோகேஸ்வரன், மேலமைப்பு பிரதிநிதி வி.வி. ரோசி, 31-வது வட்ட செயலாளர் என்.வி.ரவி (கவுன்சிலர்). எழும்பூர் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் எம்.அமீர், ராயபுரம் தொகுதி செயலாளர் ஏ.டி.அரசு, துறைமுகம் பகுதி செயலாளர் எம்.வி.ஆர்.சரவணகுமார், துறைமுகம் தொகுதி கழக பொதுக்குழு உறுப்பினர் எஸ்.வசந்தகுமார், தலைமைக் கழக பேச்சாளர் பிராட்வே எல்.குமார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட பொருளாளர், மாநகர போக்குவரத்து அண்ணா தொழிலாளர் சங்க செயலாளர் திருவொற்றியூர் பி.ராஜேந்திரன். திருவள்ளூர் தெற்கு மாவட்ட வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் ஆர்.ஜெயக்குமார், திருவள்ளூர் தெற்கு மாவட்ட சிறு பான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் திருவொற்றியூர் எஸ்.சுலைமான், திருவொற்றியூர் நகர அவைத் தலைவர் சூர்யாபாபு (கவுன்சிலர்), இணைச் செயலாளர் எஸ்.நாகம்மாள் (கவுன்சிலர்).

திருவொற்றியூர் நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பிளாஸ்டிக் கே.குப்பன், திருவொற்றியூர் நகர மாணவர் அணி துணைச் செயலாளர் போட்டோ பி.செந்தில்குமார், திருவொற்றியூர் நகர சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை தலைவர் வி.முகமது மீரான், திருவொற்றியூர் நகர 2-வது வார்டு இணைச் செயலாளர் எம்.பாத்திமாபீவி, 27-வது வார்டு கழக மேலமைப்பு பிரதிநிதி டி.கே.பாஸ்கர், 42-வது வார்டு செயலாளர் டி.என்.கலையரசன் (கவுன்சிலர்), 44-வது வார்டு செயலாளர் எஸ்.அமுல்ராஜ் (எ) வின்சென்ட் (கவுன்சிலர்), திருவொற்றியூர் தொகுதி கழக பொதுக்குழு உறுப்பினர் ஆர்.வி.தன்ராஜ் (கவுன்சிலர்), திருவொற்றியூர் தொகுதி செயலாளர் எம்.தனரமேஷ் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+