கைலாஷ் யாத்திரைக்கு அரசே மானியம் தர வேண்டும்-ராம கோபாலன்
சென்னை: ஹஜ், ஜெருசலேம் செல்வதற்கு நிதி ஒதுக்குவதைப்போல இந்துக்களின் புனித யாத்திரைக்கும் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கவேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தமிழக முதல்வர் ஜெயலலிதா கயிலாய புனித யாத்திரைக்கும், முக்திநாத் யாத்திரைக்கும் மானியம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இது குறித்து சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை, பத்திரிகை விளம்பரம் ஒன்று வெளியிட்டுள்ளது. முதலில் அரசு மானியம் வழங்கும் என்றே கூறப்பட்டது, தற்போது கோயில் பணத்திலிருந்து தருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது துரதிருஷ்டவசமானது.
மேலும் இந்த விளம்பரத்தில் மானியத்தொகை யாத்திரை போய் வந்த பின்னர் வழங்கப்படும் என்றுள்ளது. இதனால் ஏழைகள் எப்படி பயன்பெற முடியும்? அப்படியே கடன் வாங்கி போனாலும் அரசு மானியம் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இப்படி பல குளறுபடிகள் இந்த அறிவிப்பில் உள்ளதாக பக்தர்கள் கருதுகிறார்கள்.
ஹஜ், ஜெருசலத்திற்குச் சென்று வர எப்படி அரசு நிதி ஒதுக்குகிறதோ அதுபோல இந்துக்களின் புனித யாத்திரைக்கும் அரசே ஒதுக்க வேண்டும். அரசு இது குறித்து விளக்கம் அளிப்பதோடு, அரசின் நிதியிலிருந்து மானியம் வழங்கவும், மக்கள் தொகைக்கு ஏற்ப எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆவண செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications