• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேஸ்புக் ஓனரிடம் ஏன் கிரே கலர் டிசர்ட் மட்டும் நிறைய இருக்கு தெரியுமா?

By Mayura Akilan
|

Mark Zuckerberg
28 வயதான கோடீஸ்வரர் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க். இவர் அணிவது எல்லாமே ஒரே நிறத்திலான டி சர்ட்தான்.அதாவது எப்பப் பார்த்தாலும் க்ரே கலர் டி சர்ட்தான் அணிவார். ஒரு வேளை துவைப்பாரா மாட்டாரா என்று கூட பலருக்கு சந்தேகம் வரும். அப்படி ஒரு அட்ட அடி அடிப்பார் கிரே கலர் டிசர்ட்டை. ஏன் இப்படி என்று அவரிடம் கேட்டால், என்னிடம் ஒரே கலரில் 20 டி சர்ட்கள் இருக்கின்றன என்று கூறியுள்ளார்.

மார்க் ஜூகர்பெர்க் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் நான் என்ன கலர் உடை அணிகிறேன் என்பது பற்றி கவலைப்படுவதில்லை. என்னிடம் ஒரே கலரில் 20 டி சர்ட்கள் இருக்கின்றன. என் மனைவி பிரிசில்லாவிற்கு இது நன்றாக தெரியும் என்றார்.

பின்னர் ஃபேஸ்புக்கின் எதிர்காலம் பற்றி பேசிய மார்க். ஆப்பிள் நிறுவனத்தில் டிம் குக் தனக்கு ஐபோன் 5 பரிசளித்ததை கூறினார். ஐ போன் 5 மிகச்சிறந்த டிவைஸ் இது இன்றைய காலத்திற்கு ஏற்றது என்றும் கூறினார்.

சமீபத்தில் ரஷ்யா சென்ற ஜூகர்பெர்க் பிரதமர் டிமித்ரி மெத்வதேவ் உடன் சந்தித்து பேசியதை தெரிவித்தார். அப்பொழுது டார்க் கலரில் சூட் அணிந்து சென்றதாகவும் கூறினார்.

மேலும் பிரதமரின் ஃபேஸ்புக் பக்கத்தின் நினைவாக வெள்ளைநிற டி சர்டில் Facebook.com/Dmitry.Medvedev என்று பிரிண்ட் செய்து அதனை பரிசளித்ததாகவும் கூறினார் ஜூகர்பெர்க்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Facebook CEO Mark Zuckerberg has said he owns 20 identical grey T-shirts, and that was why it seems he wears the same thing every day.In a TV interview, the 28-year-old millionaire also revealed he does not get much closet space at home, and the space is mainly used by wife Priscilla Chan, the Daily Mail reported.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more