யாழில் பாக். வேவு தளம்- அதிர்ச்சியில் உறைந்த இந்தியா குழுவை இலங்கைக்கு அனுப்புகிறது
யாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தியாவை வேவு பார்ப்பதற்காக பாகிஸ்தான் வேவு தளம் அமைத்துள்ளதாகக் கூறப்படுவது பற்றி விசாரணை நடத்த இந்திய குழு அந்நாட்டுக்கு செல்ல இருக்கிறது.
இலங்கையின் பாகிஸ்தான் தூதரகம் இந்தியாவுக்கு எதிரான உளவு வேலைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளே உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு நேரடியாக தகவல்களை பரிமாறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழகத்தில் தமீம் அன்சாரி என்பவர் கைது செய்யப்பட்டார். பிடிபட்ட தமீம் அன்சாரியும் இதே தகவல்களையே தமிழக போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோர கடற்படை தளமான விசாகப்பட்டினத்தை வேவு பார்க்கும் வகையில் இலங்கையின் யாழ்ப்பாண பகுதியில் வேவு தளம் ஒன்றை பாகிஸ்தான் அமைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இதனால் கடும் அதிருப்தி அடைந்திருக்கும் இந்திய அரசு அண்மையில் இலங்கை அரசுடன் இது தொடர்பாக பேச்சுக்களை நடத்தியிருக்கிறது. மேலும் இந்திய உயர்நிலைக் குழு ஒன்ற் இலங்கை சென்று அந்நாட்டு அரசுடன் இது தொடர்பாக விரிவாக விவாதிப்பதுடன் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் சந்தேகத்துக்குரிய இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் இலங்கையை மையமாக வைத்து இந்தியா- பாகிஸ்தான் இடையேயான மோதல் விஸ்வரூபமெடுத்து வருகிறது.
-
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications