தலைவர் பாட்டுக்கு திடீர்னு சொல்லிட்டாரே... கருப்புச் சட்டைக்கு அலைந்த திமுகவினர்!

அதிமுக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி கிடைப்பதில் சில பல சிக்கல்கள் ஏற்பட்டதால் அந்தப் போராட்டத்தை ரத்து செய்து விட்டு 3 நாட்களுக்கு கருப்புச் சட்டை அணிந்து, வீடுகள் தோறும் துண்டுப் பிரசுரம் வழங்கி எதிர்ப்பைக் காட்ட திமுக தலைமை முடிவு செய்து அறிவித்தது.
இதனால் திமுகவினர்தான் திணறிப் போயுள்ளனர். திடீரென கருப்புச் சட்டை அணியும் போராட்டத்தை திமுக தலைமை அறிவித்ததால், கருப்புச் சட்டையைத் தேடி அலையும் நிலைக்குத் திமுகவினர் தள்ளப்பட்டனர்.
சென்னை, ஈரோடு, திருப்பூர், ஆத்தூர் உள்ளிட்ட பல ஊர்களில் ஜவுளிக் கடைகளுக்குப் படையெடுத்தனர். அண்ணே, கருப்புச் சட்டை இருக்காண்ணே என்று கேட்டு குவிந்த திமுகவினரை பல்வேறு கடைகளிலும் பார்க்க முடிந்தது.
கடலூர் மாவட்டத்தில் கருப்புச் சட்டைகளைத் தயார் செய்வதற்காகவே ஒரு ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தினர். இதுகுறித்து முன்னாள் பண்ருட்டி எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் கூறுகையில், சென்னையிலிருந்து 200 கருப்புச் சட்டைகளை வாங்கியுள்ளோம். ஆளுக்கு 5 முதல் 10 சட்டை கேட்டுள்ளோம். சிலர் அவர்களாகவே வாங்கியுள்ளனர். சிலர் ஏற்கனவே வைத்திருந்த கருப்புத் துணியை டெய்லர்களிடம் கொடுத்து தைக்கச் சொல்லியுள்ளனர். சீக்கிரமே தைத்துக் கொடுக்குமாறும் டெய்லர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.
இன்னொருவர் கூறுகையில், இளைஞர்கள், மாணவர்கள் பெருமளவில் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். எனவே கருப்புச் சட்டைக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பலர் ஏற்கனவே வைத்திருந்த சட்டையுடன் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். அது இல்லாதவர்களுக்குத்தான் தற்போது பிரச்சினையாகியுள்ளது. இருந்தாலும் போதிய அளவுக்கு கருப்புச் சட்டைகளை தேற்றி விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
கருப்புச் சட்டைகள் கேட்டு திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆடை நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட ஆர்டர்கள் வேறு குவிந்துள்ளதாம். சட்டை இல்லாதவர்கள் கருப்பு டி சர்ட்டுகளைத் தேடிப் பிடித்து வாங்கியதையும் காண முடிந்தது.
நல்லவேளை, கருணாநிதி முன்பு அணிந்திருந்த மஞ்சள் துண்டைப் போல மஞ்சள் சட்டை போட்டு போராட்டம் நடத்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications