கருணாநிதியின் உடை மாற்றத்துக்கு என்ன காரணம்?- கிளம்பும் வதந்திகள்

திமுக தலைவர் கருணாநிதி ஆரம்ப காலத்தில் வெள்ளை உடையும், வெள்ளைத் துண்டும்தான் அணிந்திருந்தார். பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மஞ்சள் துண்டுக்கு மாறினார். இதுகுறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின.
ஜோதிடர்களின் ஆலோசனைப்படிதான் தனது வெள்ளைத் துண்டை கழற்றி விட்டு மஞ்சள் துண்டுக்கு கருணாநிதி மாறினார் என்று கூற ஆரம்பித்தனர். இதை கருணாநிதி மறுக்கவும் இல்லை ஆமோதிக்கவும் இல்லை.
இதுகுறித்து ஜோதிடர்கள் தரப்பில் கேட்டபோது அவர்கள் கூறுகையில், கருணாநிதியின் ராசி ரிஷபம். அவரது நட்சத்திரம் மிருகசீரிஷம். இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்ற நிறம் வெளிர் மஞ்சள் நிறம்தான். இதை அவர்கள் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் நிச்சயம் அது அவர்களுக்குப் பலன் தரும் என்றனர். எனவே ஜோதிடர்களின் ஆலோசனைப்படிதான் வெளிர் மஞ்சள் நிறத்திற்குக் கருணாநிதி மாறினார் என்கிறார்கள். இது கருணாநிதி விருப்பத்தின் பேரில் நடக்கவில்லை என்றும் அவரது மனைவியின் வேண்டுகோளின்படிதான் அவர் மஞ்சள் துண்டுக்கு மாறினார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையி்ல் தற்போது கருணாநிதி கருப்புக்கு மாறியுள்ளார். அதாவது கருப்புச் சட்டைக்கு மாறி விட்டார். நேற்று முதல் அவர் கருப்புச் சட்டையை கையில் எடுத்துள்ளார். இனி இதுதான் நிரந்தரம் என்றும் கூறியுள்ளார்.
இதற்கும் ஜோதிடர்கள் தரப்பில் ஒரு காரணம் கூறப்படுகிறது. அதாவது தற்போது கருணாநிதியின் ராசியில் சனி சஞ்சாரம் செய்கிறார். மேலும் வக்கிரச் சனியும் நடந்து வருகிறது. எனவே கெடுதல் ஏதும் ஏற்படாமல், நிவர்த்தி செய்யும் வகையில், கருப்புச் சட்டையை கருணாநிதி கையில் எடுத்துக் கொடுத்துள்ளனர் என்று கூறுகிறார்கள் ஜோதிடர்கள் சிலர்.
உண்மை எது என்று தெரியவில்லை!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications