பெண்களுடன் இருந்தபோது 'தூங்கிக் கொண்டிருந்தாரா' என்.டி.திவாரி?

எப்படி பல் விளக்குவது என்றாலே பயரியா பல் பொடி நினைவுக்கு வருமோ, அதேபோல, திவாரி என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரது அஜால் குஜால் லீலைகள்தான். அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆடிய லீலையின் விளைவாக பிறந்த அவரது மகனையே, தனது மகன் இல்லை என்று பல காலமாக கண்ணாமூச்சி ஆடி வந்தார் திவாரி. சமீபத்தில்தான் டிஎன்ஏ டெஸ்ட் மூலம் திவாரியின் குட்டு அம்பலமானது.
அதேபோல ஆந்திர மாநில ஆளுநராக இருந்தபோது பெண்களுடன் உல்லாசமாக இருந்து சிக்கி பதவியை ராஜினாமா செய்து விட்டு ஊரைப் பார்ககப் போனார் திவாரி.
இந்த நிலையில் திவாரிக்கு பல ஆண்டு காலமாகவே தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டு வந்ததாகவும், இது அவருக்கே தெரியாது என்றும், இது மிகப் பெரிய சதி என்றும் அவரது பாதுகாப்பு உதவியாளர் கூறியுள்ளார்.
இதுகுறித்து திவாரியின் பாதுகாப்பு உதவியாளரான பவானிதத் பட் டேராடூனில் கூறுகையில், உத்தரகாண்ட் முதல்வராக திவாரி பதவியேற்றது முதலே அவருக்கு தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இது திவாரிக்கே தெரியாது.
பெரும் சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகும் இது. இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு நான்கு முறை பிற மருந்துகளுடன் சேர்த்து அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து வந்துள்ளனர்.
இதில் அவருடைய நெருக்கமான உதவியாளர்களுக்கும் தொடர்பு உள்ளது. அவரை மயக்கத்திலேயே வைத்திருந்த பல முக்கிய ஆவணங்களில் கையெழுத்தும் பெறப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில ஆளுநராக இருந்தபோதும் அவருக்கு தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் மீது செக்ஸ் புகார் சுமத்தி பதவியை விட்டு விலக வைத்துள்ளனர்.
எட்டு மாதங்களுக்கு முன்பு திவாரியின் உடல் நிலை மோசமானது. இதையடுத்து அவரது உறவினர் மனீஷ் திவாரி, என்டி திவாரியைக் கவனிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் அவருக்கு நீண்ட காலமாக தூக்க மாத்திரை கொடுக்கப்பட்ட விவரம் தெரிய வந்தது என்றார்.
ஆனால் இந்த தூக்க மாத்திரை விவகாரம் ஒரு அரசியல் ஸட்ண்ட் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. தன்னைச் சுற்றி நிற்கும் சர்ச்சைகளிலிருந்து தப்பிக்க நாடமாடுகிறார் திவாரி என்றும் அது கூறியுள்ளது.
இந்தப் புதிய சர்ச்சையால் ஆந்திர மாநில ஆளுநராக திவாரி இருந்தபோது பெண்களுடன் அவர் உல்லாசமாக இருந்த சமயத்தில் தூங்கிக் கொண்டிருந்தாரா அல்லது நல்ல சுய நினைவுடன்தான் இருந்தாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த புதிய கதை குறித்து 88 வயதான திவாரி கருத்து கூற மறுத்து விட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications