பிரிட்டிஷ் , ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

Subscribe to Oneindia Tamil

John B Gurdon and Shinya Yamanaka
ஸ்டாக்ஹோம்: 2012-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள் இருவர் பெறுகின்றனர்.

இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்று அறிவிக்கப்பட்டது. ஸ்டெம்செல் உருவாக்கம் குறித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக பிரிட்டனின் ஜான் கர்டன், ஜப்பானின் ஷின்யா யமனகா ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

கர்டன், யமனகா ஆகியோரின் கண்டுபிடிப்புகள், உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஸ்டாக்ஹோம் கரோன்லின்ஸ்கா மருத்துவ பல்கலைக்கழக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட முதல் நோபல் பரிசு இதுதான். இயற்பியலுக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படுகிறது.

வேதியியலுக்கான நோபல் பரிசு புதன்கிழமையும், இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமையும், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும் அறிவிக்கப்படும் (இந்தப் பிரிவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!). பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 15ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

அனைத்து பரிசுகளும் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10ம் தேதி வழங்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+