வத்ராவின் சொத்து கிடக்கட்டும்.. பிரியங்கா எப்படி இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு?
சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். ஆனால் வத்ராவின் பெயரைக் கேட்டு ஆச்சரியப்படுவது புதிதல்ல, டெல்லி மக்களுக்கு. மாறாக அவரை பிரியங்கா காதலித்தபோதும் சரி, அவரை கல்யாணம் செய்தபோதும் இவரைப் போய் எப்படி பிரியங்கா திருமணம் செய்து கொண்டார் என்றே ஆச்சரியப்படுகின்றனர் டெல்லி மக்கள். ஏனென்றால் வத்ராவின் பின்னணி அப்படி.

வத்ராவின் பின்னணி தெரியுமா?
மொராதாபாத்தைச் சேர்ந்த சாதாரண வர்த்தகர்தான் வத்ரா. பிரியங்காவுக்குப் பக்கத்தில் நிறுத்தி வைத்தால் படு சாதாரணமாகத்தான் தெரிவார் வத்ரா. அவரைவிட அழகிலும் சரி உயரத்திலும் சரி ஒரு படி குறைவுதான். நேரு- இந்திரா காந்தி குடும்பத்துக்கும் இவருக்கும் சற்றும் பொருத்தம் கிடையாது. ஆனால் இவர் இந்திரா காந்தி குடும்பத்துடன் வந்து சேர்ந்ததுதான அனைவரையும் அன்றே ஆச்சரியப்படுத்தியது.

ஆயிரத்தில் கடைசி கூட கிடையாது.....
இந்தியாவின் 1000 தகுதி வாய்ந்த பேச்சலர்கள் பட்டியலைத் தயாரித்தால் அதில் கடைசி இடம் கூட வத்ராவுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்பதுதான் ரியாலிட்டி. இப்படி 1997ம் ஆண்டு அவுட் லுக் பத்திரிக்கை வத்ராவை வர்ணித்தது. படு சாதாரண நபரான வத்ராவை எப்படி காந்தி குடும்பத்தின் மருமகனாக கருத முடியும் என்று தெரியவில்லை என்றும் அவுட்லுக் வர்ணித்தது.

சுமாரான வத்ரா... டென்சனான நண்பர்கள்...
வத்ராவை பிரியங்கா மணக்க முடிவு செய்தபோது வத்ராவின் நெருங்கிய நண்பர்களே டென்ஷனாகி விட்டார்களாம். எப்படி வத்ராவை பிரியங்கா மணக்க முடிவு செய்தார் என்று அவர்கள் ஆச்சரியத்துடன் கேட்டார்களாம். ஏனெனில் வத்ரா படிப்பில் படு சுமாராம். விளையாட்டிலும் பெரிய ஆள் கிடையாது. அவர் ஒன்றும் அவ்வளவு பெரியஆள் இல்லையே என்பதுதான் பிரியங்காவின் நண்பங்களின் ஆச்சரியம்.

நேரு குடும்பத்திற்கு இது புதுசில்லை
நேரு குடும்பத்தில் சாதாரணர் ஒருவர் வருவது புதிதல்ல. முன்பு பெரோஸ் காந்தி, இந்திராவை மணந்தார். அதேபோல சஞ்சய் காந்தி மேனகாவை மணந்தார். ராஜீவ் காந்தி, இந்தியாவுக்குச் சம்பந்தமே இல்லாத சோனியா காந்தியை மணந்தார். இவர்கள் வழியில் ராபர்ட் வத்ராவை பிரியங்கா மணந்தார். ஆனால் பெரோஸ், மேனகா, சோனியாவுடன் ஒப்பிட்டால் அவர்களுக்குப் பக்கத்தில் கூட வர மாட்டார் வத்ரா.

பிரியங்காவை திருமணம் செய்த பின்னர் .....
எப்படி இருந்த வத்ரா இப்படி பணக்காரர் ஆனார் என்பது இன்னொரு ஆச்சரியம். காரணம் அவரது குடும்பப் பின்னணி அவ்வளவு சாதாரணமானது. பிரியங்காவின் கணவராக மாறிய பிறகே பெரும் பணக்காரர் ஆனார் வத்ரா.

தினந்தோறும் பேராட்டம்தானாம்....
ஒருமுறை பிரியங்கா குறித்து வத்ரா கூறுகையில், பிரியங்காவுக்காக நான் எனது வாழ்க்கையை விட்டுக் கொடுத்துவிட்டேன். என்னை எல்லோரும் பிரபலமானவன் என்கின்றனர் ஆனால் தினம் தினம் நான் போராடி வருகிறேன் என்றார் வத்ரா.

இன்னமும் விலகிடாத மர்மம்தான்
ராபர்ட் வத்ரா எப்படி சொத்து சேர்த்தார் என்பதை, டிஎல்எப்புக்குள் அவர் எப்படி புகுந்தார் என்பதை விட பிரியங்காவை அவர் எப்படி ஈர்த்தார் என்பதுதான் மாபெரும் மர்மம் என்பதில் சநதேகமே இல்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications