காவிரிப் பிரச்சினை வாழ்வாதாரப் பிரச்சினை, அனைவரும் ஒன்றிணைவோம்: டி.ராஜா அழைப்பு
திருவாரூர்: காவிரிப் பிரச்சினை தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை. அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூரில் இன்று ராஜா தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் ராஜா பேசுகையில், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் இன்னல்களைப் போக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காவிரியில் தேவையான தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும்.
இது கர்நாடகத்துக்கும் மத்திய அரசுக்குமான போராட்டம் அல்ல. தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்கான போராட்டம். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்துகிறது.
காவிரி பிரச்னையில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். தமிழக மக்களின் நிலைமையை உணர்ந்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
தமிழகத்துக்கு உரிய பங்கீட்டு நீரை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீரை நிறுத்தினால், உடனடியாக மத்திய அரசு தலையிட்டு தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications