கர்நாடகா மாநில அரசை 356-வது பிரிவை பயன்படுத்தி டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: கருணாநிதி அதிரடி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

karunanidhi
சென்னை: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை மீறி தண்ணீர் திறப்பதை நிறுத்திய கர்நாடக அரசைக் கலைக்கும் வகையில் அரசியல் சாசனப் பிரிவு 356-வது பிரிவை பயன்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி திடீரென வலியுறுத்தியுள்ளார். மாநில சுயாட்சி பேசிக் கொண்டும் மாநிலங்கள் மீது 356-வது அரசியல் சாசன பிரிவை பயன்படுத்தி கலைப்பதை எதிர்த்தும் குரல் கொடுத்து வந்த திமுக முதல் முறையாக இத்தகைய குரல் எழுப்பியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

நெடுங்காலமாக காவேரி தண்ணீர் பங்கீட்டுப் பிரச்சினையில் தீர்வு காணமுடியாமல் தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே நிலவிட வேண்டியசகோதர உணர்வுக்கும் நெருக்கடி ஏற்பட்டு,இரு மாநிலமக்களும்ஒற்றுமையாகப் பேசி விவாதித்து நட்புணர்வோடு பழகத் தலைப்பட்டால் தான் இந்திய ஒருமைப்பாட்டுக்கு வலிவு என்ற நிலையில், என் தலைமையிலே இருந்த தி.மு. கழக ஆட்சியில், அன்றைக்குப் பிரதமராக இருந்த வாஜ்பாயை சந்தித்து, காவேரி ஆணையத்தை 1998ஆம் ஆண்டு உருவாக்கக்கூடிய ஒரு நிலைமை ஏற்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகும் கூட, அந்த ஆணையத்திற்கு மரியாதை காட்டாமல்அதை ஏற்றுக் கொள்ளாமல் "பல் இல்லாத ஆணையம்", அதனால் ஒரு பயனும்விளையாது என்று, அப்போது இங்கேயிருந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாஅவர்கள் அறிக்கைகள் விட்டும், அந்த ஆணையத்தின் கூட்டங்களுக்குச்செல்லாமல் புறக்கணித்து, இரு மாநில மக்களுக்கிடையே ஏற்பட வேண்டியஉறவும் நேசமும் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை உருவானது.அந்த நேரத்தில் நல்ல வேளையாக எடியூரப்பா அவர்கள் முதல்அமைச்சராக இருந்த போது நான் அவரிடம் பல முறை விவாதித்து, கர்நாடகமாநிலத்தார்,தமிழக மாநிலத்தார் என்ற இரு மாநிலத்தாரும் விரோதஉணர்வைக் கை விட்டு நட்புணர்வோடு பழகிட வேண்டும் என்பதற்காக பலஆண்டுகளாக பெங்களூரில் மூடிக் கிடந்த திருவள்ளுவர் சிலையை நான் சென்று திறந்து வைத்தும், அதற்கு ஈடாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா சென்னையில் உள்ள சர்வக்ஞர் சிலையை திறப்பது என்றும் முடிவு செய்து அவ் வண்ணமே இரு மாநிலங்களிலும் இரு விழாக்கள் சகோதர உணர்வோடு நடத்தப்பட்டது.

ஒருமைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் கர்நாடகா

இப்போது திடீரென்று தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி தண்ணீரைத்தராமல் கர்நாடக அரசு பிடிவாதம் செய்ததை ஒட்டி, தமிழக அரசு உச்ச நீதிமன்றம் வரை முறையிட்டு அதிலும் உரிய பயன் கிடைக்க முடியாமல் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகம் தர மறுத்த நிலையில்காவேரி ஆணையத்தின் அதிகாரப் பூர்வமான தலைவரான பிரதமர் அவர்களேதமிழகத்திற்குத் தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டுமென்று ஆணைபிறப்பித்த நிலையிலே கூட - அந்த ஆணையை, காவேரி ஆணையத்தின்தலைவர் பிரதமர் அவர்கள் விடுத்த வேண்டுகோளாகவோ அல்லது அதிகாரப்பூர்வ ஆணையாகவோ கர்நாடக அரசு கருதாமல் - மேலும் மேலும் வறண்டுகிடக்கும் தமிழக விவசாய நிலங்களுக்கு உரிய தண்ணீரை தர மறுத்து -தாமதம் காட்டி வருவதுமட்டுமல்ல,தண்ணீரைக் கேட்கின்றஉரிமைதமிழ்நாட்டிற்கு இல்லை என்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு - அதன்காரணமாக இரு மாநில ஒற்றுமைக்கும் ஊறு தேடி வருகிறது.தமிழ் நாட்டு மக்களை பகை நாட்டு மக்களைப் போலவும், பன்னெடுங்காலமாகவிவசாயத்தையேநம்பி வாழும்தமிழக உழவர் பெருமக்களைபரம்பரை விரோதிகள் போலவும் எண்ணிக் கொண்டு, ஏட்டிக்குப் போட்டியாககர்நாடக அரசின் நிர்வாகத்தில் இருப்போர்கன்னட மக்களுக்கும்,தமிழ்மக்களுக்கும்நிரந்தரமானஒரு பகையை உருவாக்கும்முயற்சியிலேஈடுபட்டிருப்பது இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையே கேள்விக் குறியாக ஆக்கியிருக்கிறது.இந்த நிலைமை வருந்தத் தக்கது மாத்திரமல்ல, கண்டிக்கத்தக்கதுமாகும்.

356-வது பிரிவை பயன்படுத்தி கலைக்க வேண்டும்

தமிழகத்தின் சார்பில் அமைதியான முறையிலும், நீதி மன்றங்களின்வாயிலாகவும்எடுத்து வந்தநிலைப்பாட்டுக்குஎதிராககர்நாடக அரசுஒத்துழையாமை கிளர்ச்சியை நடத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது, இந்திய நாட்டு ஒற்றுமையை வலியுறுத்துகிற அனைவருக்கும் எதிரானசெயலாகும்.காவேரி ஆணையத்திற்கு தொடக்க காலத்தில் இந்த ஆணையத்தின்குழுவின் சார்பாக அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு வலிவு உண்டு என்பதைநிரூபிக்கும் வகையில்ஆணையத்தின்தலைவரானஒரு பிரதமருடையகருத்தையே அலட்சியப்படுத்தி, அதற்குப் பணிய மறுத்து செயல் படும் அந்தஅரசுக்கு தக்க பாடத்தைக் கற்பிக்க வேண்டியது, இனி எதிர் காலத்தில் இப்படிப்பட்ட ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்திற்கு துரோகம் இழைக்கிற செயலுக்குமுற்றுப் புள்ளி வைக்கும் என்ற நம்பிக்கையோடு,நான் பிரதமரைக் கேட்டுக் கொள்வது - இரு மாநிலத்தாரும் அன்பால்பிணைந்து, சகோதரப் பாசத்தோடு இந்திய ஒற்றுமையை, ஒருமைப்பாட்டைக்கட்டிக் காக்க வேண்டும்என்பதற்காக, கர்நாடக அரசின் மீதுஅரசியல்சட்டத்தில் 356வது பிரிவைப் பயன்படுத்துவது பற்றி இறுதி முடிவுக்கு வரவேண்டும். இந்த வேண்டுகோள் கர்நாடகத்தார் மீது எந்த காழ்ப்புணர்வோடும்கூறப்படுவதல்ல. எதிர் காலத்திலாவது மத்திய அரசு கர்நாடகம் போன்று கடியநெஞ்சத்தோடு செயல்படுகிற மாநில அரசுகளுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும் என்பதற்காகவும்,தமிழ்நாட்டு வயல்வெளிகள் மயான பூமிகளாகஆகி விடக் கூடாது என்பதற்காகவும்கண்ணீரும்கம்பலையுமாக இந்த வேண்டுகோளை விடுக்கிறேன் என்று அதில் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுகவின் கொள்கை மாற்றம்

மத்தியில் கூட்டாட்சி- மாநிலத்தில் சுயாட்சி என்பதுதான் திமுகவின் கொள்கைகளில் ஒன்று. குறிப்பாக அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி ஒரு மாநில அரசைக் கலைப்பதை திமுக கொள்கை ரீதியாக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதற்குக் காரணம் திமுகவே இந்த 356-வது பிரிவின் கீழ் அரசை 2 முறை பறிகொடுத்திருக்கிறது. இந்த நிலையில் திமுகவின் அடிப்படைக் கொள்கையில் ஒரு மாற்றமாக கர்நாடகா அரசின் மீது 356-பிரிவை பயன்படுத்த திமுக கோரியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பிரதமருடன் டி.ஆர். பாலு சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதியின், கர்நாடகா அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரும் அறிக்கை வெளியான அதே நேரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். கர்நாடகாவின் அடாவடித்தனத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ள நிலையில் டி.ஆர்.பாலு பிரதமரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கருணாநிதியின் அறிக்கையை வலியுறுத்தும் வகையில் பிரதமரிடம் கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய டி.ஆர்.பாலு வலியுறுத்தியிருக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிருஷ்ணாவுக்கு கண்டனம்

கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற அறிக்கைக்கு முன்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகத்துக்கு நீர் திறந்துவிடுவதை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கடிதம் எழுதியதைக் கண்டித்து காட்டமான ஒரு அறிக்கையையும் கருணாநிதி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+