சட்டசபை வைர விழா கூட்டம் திடீரென நவ. 30க்கு ஒத்திவைப்பு
சென்னை: தமிழக சட்டசபையின் வைர விழா சிறப்புக் கூட்டம் அக்டோபர் 29ம் தேதிக்குப் பதில் நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை புதிய சபாநாயகர் பி.தனபால் இன்று சட்டசபையில் வெளியிட்டார்.
தமிழக சட்டசபை சபாநாயகராக இருந்து வந்த ஜெயக்குமார் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய சபாநாயகராக இன்று தனபால் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் சபாநாயகராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அக். 29ல் துணை சபாநாயகர் தேர்தல்
இதையடுத்து துணை சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதன்படி அக்டோபர் 29ம் தேதி துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்றும், இதில் போட்டியிட விரும்புவோர் 26ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் அவர் அறிவித்தார்.
நவம்பர் 30ம் தேதி வைர விழா கூட்டம்
மேலும் அக்டோபர் 29ம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சட்டசபை வைர விழா சிறப்புக் கூட்டம் நவம்பர் 30ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
மேலும் சட்டசபை வைர விழா நினைவு வளைவு அடிக்கல் நாட்டு விழா அக்டோபர் 29ம் தேதி நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications