மார்பில் முடி இல்லாத ஆண்களையும் பெண்களுக்குப் பிடிக்குமாம்!
பெண்களின் டேஸ்ட் இதுதான் என்று எதையுமே தீர்க்கமாக கூற முடியாது. ஒவ்வொரு சமயத்திலும் தங்களது விருப்பங்களை மாற்றிக் கொள்வார்கள். பொதுவாக மார்பில் எக்கச்சக்க முடியுடன் இருக்கும் ஆண்களைத்தான் பெண்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று கூறுவார்கள். ஆனால் இப்போது பெண்களின் ரசிப்புத் தன்மை மாறி விட்டது போலும், மார்பில் ஒரு முடி கூட இல்லாமல், சுத்தமாக ஷேவ் செய்து வைத்திருந்தாலும் கூட பெண்களுக்கு ரொம்பப் பிடிக்கிறதாம்.

ஷேவ் செய்தாலும் பிடிக்குமாம்..!
மார்பில் முடியுடன் கூடிய ஆண்களை, முடியுடனும், பின்னர் ஷேவ் செய்து மொழு மொழுவென மாற்றியும் இந்த ஆய்வில் ஈடுபடுத்தினர். அப்போது ஆய்வில் கலந்து கொண்ட பெண்களில் 20 சதவீத பேர் மட்டுமே முடியுடன் கூடிய ஆண்களைப் பிடித்திருக்கிறது என்று கூறினார்களாம். மற்றவர்கள் முடி இல்லாத ஆண்கள்தான் சூப்பர் என்று ஒரே குரலில் கூறினார்களாம்.

காரணம் சொல்லத் தெரியாத பெண்கள்!
ஏன் முடியே இல்லாத ஆண்களைப் பிடித்திருக்கிறது என்பதற்கான காரணத்தை அந்தப் பெண்கள் சொல்லவில்லையாம். சில பெண்கள் மட்டும், முடி இருந்தால் அதில் பேன், பொடுகு போன்றவை இருக்க வாய்ப்பிருக்கிறது, அது எங்களையும் ஒட்டிக் கொண்டும், முடி இல்லாமல் இருந்தால் இந்தப் பிரச்சினையே இல்லையே என்று சிரித்தபடி கூறினார்களாம். ஆனால் இதை பெரிய காரணமாக ஆய்வாளர்கள் ஏற்கவில்லை. வேடிக்கைக்காக இப்படி சொல்கிறார்கள் என்று கூறியுள்ளனர் அவர்கள்.

ஒரு முடி கூட இல்லாமல் இருக்கோணும்!
இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் துருக்கி மற்றும் ஸ்லோவேகியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களுக்கு ஆண்களுக்கு உடலில் ஒரு இடத்தில் கூட முடியே இல்லாமல் இருந்தால்தான் தங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று கூறினராம்.

நம்ம ஊர் பெண்களின் கருத்து என்னவோ..?
ஏற்கனவே இதேபோன்ற ஆய்வை சீனா, நியூசிலாந்து, கலிபோர்னியா ஆகிய பகுதிகளிலும் எடுத்தனர். அப்போது பெரும்பாலான பெண்கள் முடியே இல்லாத ஆண்களையே விரும்புவதாக தெரிவித்தனர். காமரூனில் முடி உள்ள ஆண்களுக்கே பெண்களின் ஓட்டு அதிகம் விழுந்தது.
இது கிடக்கட்டும், நம்ம ஊர் பெண்களின் ஆதரவு யாருக்கோ...!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications