'பிரேக்' எடுக்காம வேலை பார்க்காதீங்க, ரத்தம் உறைஞ்சு செத்துப் போயிருவீங்க!
லண்டன்: வேலை செய்யும்போது, எந்தவித இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து பணியாற்றி்னால் டீப் வெயின் திராம்போசிஸ் (deep vein thrombosis-DVT) என்ற ரத்த உறைவு ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இங்கிலாந்தில் இந்த டிவிடி எனப்படும் ரத்த உறைதலால் இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம். இடைவிடாமல் தொடர்ந்து உட்கார்ந்தபடி வேலையில் ஈடுபடுவதால் வரும் வினையாம் இது.

வேலையில் மூழ்கிவிடுவது ஆபத்தான செயல்...
பல ஊழியர்கள் தொடர்ந்து உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பதோடு இல்லாமல், உட்கார்ந்த இடத்திலேயே சாப்பாட்டையும் முடித்து விட்டு தொடர்ந்து வேலையில் மூழ்கிப் போய் விடுகிறார்களாம். இதுவும் பெரும் ஆபத்தான செயல் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு நாளைக்கு 10 பேருக்காவது இந்த டிவிடி பிரச்சனை ஏற்பட்டு மரணம் வரை போகும் அபாயகரமான நிலையில் இங்கிலாந்து தற்போது உள்ளதாம்.

10 மணி நேரம் வரை கூட பிரேக்கே இல்லாமல்....
குறிப்பாக 21 முதல் 30 வயது வரையிலானவர்களுக்கே அதிக அளவில் டிவிடி பிரச்சினை வருகிறது. இவர்கள் தொடர்ந்து 10 மணி நேரம் வரை கூட பிரேக்கே இல்லாமல் வேலை செய்பவர்களாக உள்ளதால்தான் இவர்களை அதிக அளவில் டிவிடி தாக்குகிறதாம். கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்தில் டிவிடி காரணமாக 3798 பேர் உயிரிழந்துள்ளனராம்.
டிவிடி என்பது நமது நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்படும் ரத்தம் உறைதல் ஆகும். இங்கிலாந்தில் வருடத்திற்கு 60,000 பேர் இந்த பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனராம்.

சைலன்ட் கில்லர்...அறிகுறியே இருக்காது...
இந்த பாதிப்பை உடனடியாக கண்டு கொள்ள முடியாது. சைலன்ட் கில்லர் என்று கூறும் வகையில் எந்தவிதமான அறிகுறியையும் காட்டாமல் சட்டென்று உயிரைப் பறித்து விடும் அபாயகரமான பிரச்சினை என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
டிவிடி பாதிப்புக்குள்ளாவோருக்கு வலியோ, வீக்கமோ அல்லது வேறு எந்த அறிகுறியோ தெரிவதில்லையாம்.

அவ்வப்போது பிரேக் எடுக்க வேண்டும்...
டிவிடியைத் தவிர்க்க ஒரே வழி புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும், எடையைக் குறைத்துக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும், சாப்பாட்டில் கொழுப்பு, உப்பு அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும், ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காராமல் அவ்வப்போது பிரேக் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
எல்லாம் ஓ.கே. இது நம்ம பாஸூக்குத் தெரியாதே!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications