இந்தியாவில் டாப் பணக்காரர்கள்..
சென்னை: இந்தியாவின் பணக்காரர்கள் யார் என்ற பட்டியலை சீனாவைச் சேர்ந்த ஹூருன் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்தியாவின் டாப் பணக்காரர்கள் யார்? யார்? அந்த சர்வே விவரம்.... இதில் பணக்கார பெண்மணிகளின் விவரமும் அடங்கியிருக்கிறது.

முதலிடத்தில் முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானிதான் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 19.3 பில்லியன் அமெரிக்க டாலர்! அம்பானிக்கு அடுத்தது யார்?

லண்டன் வாழ் இந்தியர் மிட்டல்
முகேஷ் அம்பானியையடுத்து இந்தியாவின் 2-வது மிகப் பெரிய பணக்காரர்தான் லண்டன் வாழ் இந்தியரான தொழிலதிபர் எல்.என்.மிட்டல்.! மிட்டலோட சொத்து மதிப்பு எவ்வளவு என்கிறீர்களா? மொத்தம் 16.9 பில்லியன் அமெரிக்க டாலர்

அடுத்த டாப் அசிம் பிரேம்ஜி...
முகேஷ் அம்பானி, மிட்டல் ஆகியோரை அடுத்து இந்தியாவின் டாப் பணக்காரர்கள் யார்? விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி (12.3 பில்லியன் டாலர்), சன் பார்மசூட்டிகல்ஸின் திலிப் சங்வி( 8.5 பில்லியன் டாலர்), பல்லோன்ஜி (7.9 பில்லியன் டாலர்), எஸ்ஸார் குழுமத்தின் சாஷி அண்ட் ரவி ரூயா (7.2 பில்லியன் டாலர்),. கோத்ரெஜ் குழுமத்தின் அதி கோத்ரெஸ் (6.9 பில்லியன் டாலர்) ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றனர்!

லிஸ்ட்டில் சர்ச்சைக்குரிய டி.எல்.எப்.
சோனியாவின் மருமகன் வத்ரா வகையாக மாட்டிக் கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய கட்டுமான நிறுவனமான டி.எல்.எப். நிறுவனத்தின் குஷால் பால் சிங்கும் இந்த டாப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 6.3 பில்லியன் டாலர்.
இவருக்கு அடுத்ததாக குமாரமங்கலம் பிர்லா( 5.8 பில்லியன் டாலர்), ஹெச்.சி.எல். சிவ் நாடார் (5.7 பில்லியன் டாலர்), பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல் (5.7 பில்லியன் டாலர்) ஆகியோரும் இடம் பிடித்திருக்கின்றன்ர்.

இந்தியாவின் பணக்கார பெண்மணி
இந்தியாவின் பணக்கார பெண்கள் யார் என்ற விவரமும் வெளியிடப்பட்டிருக்கிறது. பணக்கார பெண்மணிகளில் அவர் இடம்பிடித்திருப்பரா? இவர் இடம்பிடித்திருப்பாரா? என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. தமிழகத்தைச் சேர்ந்த எந்த பெண்மணியும் இந்தப் பட்டியலில் இல்லை...

பணக்கார பெண் சாவித்ரி ஜிண்டால்
இந்தியாவின் முதல் ஐந்து பணக்கார பெண்களில் சாவித்ரி ஜிண்டாலுக்கு முதலிடம். அவரது சொத்து மதிப்பு 5.6 பில்லியன் டாலர். அவருக்கு அடுத்த இடம் பென்னெட் குழுமத்தின் இந்து ஜெயின். இவரது சொத்து மதிப்பு 1.7 பில்லியன் டாலர். அடுத்த இடத்தில் இருப்பவர் தெர்மாக்ஸ் நிறுவனத்தின் அனு அஹா. இவரது சொத்து மதிப்பு 690 மில்லியன் டாலர். பைகோன் நிறுவனத்தின் கிரன் மஜூம்தாரின் சொத்து மதிப்பு 600 மில்லியன் டாலர். இந்துஸ்தான் டைம்சின் சோஷபா பார்தியாவின் சொத்து மதிப்பு 490 மில்லியன் டாலர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications