பிரதமருடன் ஜி.கே.வாசன் சந்திப்பு: தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெற்றுத் தரக் கோரிக்கை

அப்போது, கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை காவிரியில் இருந்து பெற்றுத் தருமாறு பிரதமரிடம் வாசன் வாசன் வலியுறுத்தினார்.
காவிரி நதி நீர் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் இந்தச் சந்திப்பு நடந்தது.
காவிரி நீரில் தமிழகத்துக்கு உரிய பங்கு குறித்த உண்மை நிலையை பிரதமரிடம் எடுத்துக் கூறியதுடன் தமிழக விவசாயிகளுக்கு காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வாசன் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக சென்னையில் எண்ணூர் துறைமுக விழாவில் கலந்து கொண்ட வாசன் நிருபர்களிடம் பேசுகையில்,
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற ஆணையையும், பிரதமரின் உத்தரவையும் மீறி செயல்படும் கர்நாடக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கதாகும். இந்த செயல் நியாயமானதல்ல. சட்டப்படியும், நியாயப்படியும் கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பகிர்ந்தளித்திருக்க வேண்டும்.
பிரதமரை பொறுத்தவரை காவிரி ஆணைய கூட்டத்தில் உண்மை நிலமையை அறிந்து இரு மாநில விவசாயிகளின் அவலநிலையை, உண்மை நிலமையை புரிந்ததால் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஆனால் கர்நாடக அரசு பிரதமரின் உத்தரவை மதிக்காமல் தண்ணீர் விட தொடர்ந்து மறுக்கிறது. மீண்டும் நான் பிரதமரை சந்தித்து தமிழகத்தின் உண்மை நிலையையும், அவல நிலையையும் எடுத்துக் கூற உள்ளேன்.
மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா காவிரி விஷயத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாக பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளாரே என்று கேட்டதற்கு பதிலளித்த வாசன், பிரதமரின் தலைமையின் கீழ் உள்ள அனைத்து மத்திய அமைச்சர்களும் பிரதமர் காட்டும் வழியில் தான் செயல்பட வேண்டும். அதுதான் நாட்டுக்கு நல்லது. இதுபோன்ற பிரச்சனைகளில் மத்திய அமைச்சர்கள் பேசும் போது இரு மாநிலங்களின் நல்லுறவை மனதில் வைத்துக் கொண்டு, உறவு கெடாதவாறு பேச வேண்டும். விவசாயிகளின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
திமுக தலைவர் கருணாநிதி 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி கர்நாடக அரசை கலைக்க வேண்டும் என்று கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, ஜனநாயகத்தில் நீதிமன்றத்தையும், சட்டத்தையும் மதிக்காத எந்த மாநில அரசும் மக்கள் நலனை மனதில் கொண்டு செயல்படுபவர் அல்ல என்பதைத் தான் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications